இலங்கை கிரிக்கெட்டின் நாயகர்கள் யாழ்ப்பாணத்தில்!!

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களான சனத் ஜெயசூரியா, ஹசான் திலகரட்ண, பிரமோட்ய விக்கிரமசிங்க, உபுல் சந்தன ஆகியோர் அடங்கிய அணி யாழ்ப்பாணத்தில் விளையாட வருகிறது.

jaffna play-cricket

சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் அமைக்கப்பட்ட புற்றரை ஆடுகளத் திறப்பு விழாவின் போது முதல் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை அணி சார்பில் இவர்கள் சென்.பற்றிக்‌ஸ் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடவுள்ளனர்.

நேற்று முன்தினம் நடந்த அவசர கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது.