இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது ODI இன்று!

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 05 சர்வதேச ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரின் நான்காவது சர்வதேச ஒரு நாள் போட்டி இன்று (13) இந்தியாவின் கல்கத்தா நகரில் நடைபெறவுள்ளது.

Suraj Randiv

இலங்கை நேரப்படி பிற்பகல் 01.30 க்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. விராட் ஹோலியின் தலைமையிலான இந்திய அணியினரும் அஞ்சலோ மத்யூஸ் தலைமையிலான இலங்கையணியினரும் இப்போட்டியில் களமிறங்கவுள்ளனர்.

ஏற்கனவே இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3 – 0 என்ற ரீதியில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே இலங்கையணியினர் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்பது கிரிக்கட் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.