இலங்கை அணி அபார வெற்றி!!

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்தேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஒவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 291 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 292 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஆரோன் பின்ச் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஜெப்ரி வென்டர்சே 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸங்க 137 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் குசல் மென்டிஸ் 87 ஓட்டங்கள் பெற்ற நிலையில் உபாதை காரணமாக போட்டியில் இருந்து வௌியேறியிருந்தார்.

அதனடிப்படையில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 -1 என்ற ரீதியில் இலங்கை முன்னிலையில் உள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிகபடியான ஓட்டங்களை தமது இரண்டாவது இன்னிங்ஸில் பதிவு செய்து இலங்கை அணி புதிய சாதனையை படைத்துள்ளது.