‘இலங்கையில் தமிழர்-ஒரு முழுமையான வரலாறு’ நூலுக்கு இலங்கையில் தடை

கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய ‘இலங்கையில் தமிழர் – ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 – கி.பி 2000)’ என்னும் ஆய்வுநூல் நூலுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது என வேலணையூர் சுரேஷின் கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கலந்து உரையாற்றியாற்றிய வடமாகாணக் கல்விப் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை விவகார அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து வடமாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகளுக்கென அனுப்பப்பட்ட கலாநிதி முருகர் குணசிங்கத்தின் ‘இலங்கையில் தமிழர் – ஒரு முழுமையான வரலாறு’ என்ற நூல்களை சுங்கவரித் திணைக்களத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். அவற்றைத் தரும்படி வடமாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தாலே தரமுடியும் என சுங்கலாக இழுத்தடிப்புச் செய்கின்றது. என குருகுலராஜா மேலும் குறிப்பிட்டார்.

நல்லாட்சி என கூறப்படும் அரசங்காத்தில் பௌத்த விகரைகளையும் சிங்களக் குடியேற்றங்களையும் தமிழர் பகுதிகளில் மேற்கொள்வது மட்டுமல்ல தமிழர் வரலாற்றை இருட்டிப்பு செய்வதற்கான அம்சமாகவே கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இந்த நூலிற்கான தடையையும் கருத முடியும்.

Related Posts