இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்தது – மேலும் 63 உயிரிழப்புகளும் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 இலட்சத்து 71 ஆயிரத்து 855 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 25 ஆயிரத்து 719 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 28 பெண்களும் 35 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor