இலங்கையில் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியே – மன்னார் மறைமாவட்ட ஆயர்

ஊடகம் என்பது உண்மைகளை வெளிக்கொண்டு வருதே. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் ஊடகசுதந்திரம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

mannar-ayar

பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவதும், காணாமல் போவதும் ஊடக அலுவலகங்கள் தாக்கப்படுவதும் என நீண்டகாலமாக இருந்துவரும் துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது.

உண்மைகள் வெளி வந்து விடும் எனும் அச்சத்தினாலேயே உரியவர்கள் இவ்வாறான தீய காரியங்களை மேற்கொள்கின்றனர் என மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை தெரிவித்தார்.

மன்னாரில் இருந்து வெளிவரும் தமிழ் நாழிதலான புதியவன் தனது 150 ஆவது இதழை நேற்று முன்தினம் சனிக்கிழமை வைபவ ரீதியாக வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.