வெளிநாடுகளில் நியமிக்கவுள்ள இலங்கையின் தூதுவர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதயபெரேராவினை பலாலி படைத் தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
நேற்று யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட இவர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலயம், யாழ்.பொதுநூலகம், யாழ்ப்பாணக் கோட்டை ஆகியவற்றினைப் பார்வையிட்டதுடன், யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமை நாயகத்தினை மாவட்டச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
இதனைத் தொடர்ந்தே யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதியினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.