இலங்கையரின் கணினி கல்வியறிவு அதிகரிப்பு

2006 -2007 வரையான காலப்பகுதியில் நூற்றுக்கு 16.1 சதவீதமாக காணப்பட்ட இந்நாட்டு கணினி கல்வியறிவு 2015ம் ஆண்டின் போது நூற்றுக்கு 27.1 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணினி கல்வியறிவு தொடர்பில் புதிய ஆய்வறிக்கையை வௌியிட்ட போது இதனை தெரிவித்துள்ளது.

இதில் , ஆண்களிடம் கணினி கல்வியறிவு நூற்றுக்கு 29.1 சதவீதமாகவும் , பெண்களிடம் கணினி கல்வியறிவு நூற்றுக்கு 25.3 சதவீதமாகவும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor