இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயம்

accidentஇருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை (09) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். பருத்தித்துறை வீதி முத்திரைச் சந்திப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிள் அருகிலுள்ள வாய்க்காலிற்குள் பாய்ந்ததில் கச்சேரி நல்லூர் வீதியினைச் சேர்ந்த ச.சந்திரகுமார் (37) என்பவர் படுகாயமடைந்தார்.

அதேவேளை, யாழ்.பெருமாள் கோவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ்.மடத்தடியினைச் சேர்ந்த அன்ரன் பாலசூரியன் (41), திடீரென நாய் குறுக்கிட்டதினால் நாயுடன் மோதுண்டு கீழே வீழ்ந்து படுகாயமடைந்தார்.