இராணுவ வாகனம் மோதி வயோதிபர் படுகாயம்

யாழ்ப்பாணம், பண்ணை வீதியில் இராணுவ வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த எஸ்.சோமசுந்தரம் (வயது 74) என்பவரே படுகாயமடைந்தவராவார். மோட்டார் சைக்கிளில் சென்ற இவரை, பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸாரும், இராணுவ பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.