கைதடிப் பகுதியில் வீதியினை கடக்க முற்பட்ட 70 வயது மூதாட்டி மீது இராணுவ வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மூதாட்டி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
கைதடியினைச் சேர்ந்த பண்டாரி நாச்சி என்ற மூதாட்டியே தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.