இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மரணம்: இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணொருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவமொன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான பிரசாத் அஜந்தா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

army-women-dead-1

குறித்தப் பெண் கடந்து மே மாதம் 22ஆம் திகதி இராணுவத்தில் இணைந்துள்ளார். இவர் இராணுவ பயிற்சிகளில் ஈடுபடும் போதே சுகயீனம் ஏற்பட்டதாகவும் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

army-women-dead

குறித்தப் பெண்ணின் சடலம் செல்வபுரத்தில் உள்ள உயிரிழந்த பெண்ணின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் இராணுவ மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor