இரகசிய வாக்களிப்பு: தம்பி மீது அண்ணன் கத்திக்குத்து

பதுளை சென்.ஜேம்ஸ் தோட்டத்தில் வசிக்கின்ற குடும்பமொன்றில் மூத்த சகோதரன், தன்னுடைய இளைய சகோதரன் மீது கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூத்த சகோதரர் விரும்பாத கட்சியொன்றுக்கு இளைய சகோதரர் வாக்களித்துள்ளதை அடுத்தே இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.