இயேசு அவதரித்த தேவாலயத்தில் ஜனாதிபதி

தற்பொழுது பலஸ்தீனம் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்கள் ஆகியோருக்காக பெத்தலஹேம் நகர இயேசு அவதரித்த தேவாலயத்தின் ஜெருசலம் கிரேக்க ஒதொடொக்ஸ் சபையின் தலைவர் மூன்றாவது தியோபிலஸ் (Theophilos III)) குருவானவர் கீழைத்தேச நத்தார் பண்டிகைக்கு முதல் நாள் (சனவரி 06) இராப்போசண விருந்தொன்றை நடத்தினார்.

midnight Mass for the Orthodox Christmas Eve

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள், முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்களுடன் பலஸ்தீன சனாதிபதி கலாநிதி மஹமூத் அப்பாஸ் Dr. Mahmoud Abbas) அவர்கள், பிரதம அமைச்சர் ராமி ஹம்டெல்லா (Rami Hamdallah) அவர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பிரபுக்கள் பலர் இவ் இராப்போசண விருந்தில் கலந்துகொண்டனர்.

பெத்தலஹேம் நகரில் இயேசு பிறந்த பிறந்த தேவாலயம் இயேசு அவதரித்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இத் தேவாலயம் சனவரி 07ஆம் திகதி கீழைத்தேச ஒதொடொக்ஸ் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகிறது. மேலைத்தேச கிறிஸ்தவ மரபுகளின் பிரகாரம் நத்தார் தினம் டிசம்பர் 25ஆம் திகதி கொண்டாடப்பட்டாலும் கீழைத்தேச ஒதொடொக்ஸ் கிறிஸ்தவ பிரிவுகள் பல இயேசு நாதரின் பிறப்பை சனவரி 07ஆம் திகதி கொண்டாடுகின்றன.

பெத்தலஹேம் நகரின் இயேசு அவதரித்த தேவாலயம் பிரமாண்டமான வணக்கஸ்தலமாகும். இயேசு அவதரித்த தேவாலயம் ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாசார அமைப்பினால் (யுனெஸ்கோ) முதல் முறையாக பலஸ்தீனத்தில் உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆபத்தான நிலைக்குள்ளாகியுள்ளதென யுனெஸ்கோ அடையாளம் கண்டுள்ள உலக மரபுரிமை பதிவேட்டில் அதைப் பதிந்துள்ளது. தேவாலயத்திற்கு உரிய கலாசார மற்றும் பூகோள வரலாறு காரணமாக இப்புனித பூமி கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமிய பக்தர்களுக்கும் மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.
தேவாலயத்தில் ஒதொடொக்ஸ் குருமார்கள் விசேட ஆசீர்வாத பிரார்த்தனைகளை நடத்தினர்.

ஜெருசலம் ஒதொடொக்ஸ் சபையின் பிரதான மதகுரு நடத்திய ஒதொடொக்ஸ் நத்தார் தினத்திற்கு முதல் நாள் நள்ளிரவு ஆராதனையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், முதற் பெண்மணியும் பலஸ்தீன சனாதிபதி அப்பாஸ் அவர்களும் கலந்துகொண்டனர்