இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக அறிவிக்க துரித தொலைபேசி இலக்கம்!

நாட்டில் வரும் நாட்களில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தத்திற்கு முகம்கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்குத் அறிவிக்க முடியுமென அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இந்த சேவை 24 மணி நேரமும் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் 12 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஆயிரத்து 143 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor