இம்மாதம் 30 தொடக்கம் மே 6 வரை வெசக் வாரமாக பிரகடனம்

ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி தொடக்கம் மே 6ஆம் திகதி வரை வெசக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அரச நிர்வாக- மாகாணசபை மற்றும் ஜனநாயக நல்லாட்சி தொடர்பான அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

vesak

அத்துடன் மே மாதம் 3ஆம் 4ஆம் திகதிகளை வெசக் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேசிய வெசக் உற்சவத்தை மஹியங்கன ரஜ மகா விகாரையில் 3ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இம்முறை ‘அன்பை ஏற்படுத்துவோம்’ (மைத்ரிய வடவமு) என்ற தொனிப்பொருளில் வெசக் உற்சவம் கொண்டாடப்படவுள்ளது.2015 உற்சவத்தை முன்னிட்டு இம்மாதம் 20ஆம் திகதி ஞாபகர்த்த முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது.

வெசக் தினங்களில் மதுபான விற்பனை நிலையங்கள்- இறைச்சி விற்பனை நிலையங்கள் என்பன மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts