இந்தோனேஷியாவில் 7.6 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம்

இந்தோனோஷியா மற்றும் கிழக்கு திமோர் அருகில் இன்று காலை 7.6 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டது.

இந்தோனேஷியாவின் அம்போன் தீவிலிருந்து 427 கிலோமீற்றர் தொலைவில் கடல‍டியில் 86.9 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்பூகம்பத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பின்னர் அந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது.

திமோரின் கிழக்குப் பிராந்திய தீவுகள், மலுகு தீவுகள் மற்றும் பப்புவாவில் இப்பூகம்பம் உணரப்பட்டதாக இந்தோனேஷிய வளிமண்டலவியல், வானிலை மற்றும் புவிவியல் முகவரம் தெரிவித்துள்ளது.

இக்பூகம்பத்தினால் அருகிலுள்ள தீவுகளின் வீடுகள் சேதமடைந்தன. மக்கள் அச்சமடைந்து வீடுகளிலிருந்து ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.