இந்திய மீனவர்கள் சுற்றாடலை அழிக்கின்றனர் – ஜனாதிபதி

இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கையின் சுற்றாடலை அழிக்கின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

mahintha_CI

ஒன்று இரண்டு என்றில்லாமல் நூற்றுக்கணக்கான இழுவைப் படகுகள் இலங்கை கடற் பரப்புக்குள் ஒவ்வொரு நாளும் வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

த ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.