இத்தாலியில் அதிர்ந்தன மலைப்பகுதிகள்: 120 பேர் பலி

இத்தாலியில் மலைப்பகுதிகள் நிறைந்துகாணப்படும் மத்திய இத்தாலியில், நேற்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக, குறைந்தது 120 பேர் பலியாகியுள்ளனர் அறிவிக்கப்படுகிறது . 6.2 றிக்டர் அளவில் ஏற்பட்ட பலமான இந்தப் பூமியதிர்ச்சி, கட்டடங்களைக் கீழே வீழ்த்தியிருந்தது.

உம்பிரியா பிராந்தியத்திலுள்ள நோர்ச்சா நகரத்துக்கு அண்மையில், இத்தாலி நேரப்படி அதிகாலை 3.36க்கு (இலங்கை நேரப்படி காலை 6:06), இந்தப் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தப் பூமியதிர்ச்சி காரணமாக, அக்கும்மொலி, அமட்ரீஸ், பொஸ்டா, அர்குவாட்டா டெல் ட்ரோன்டோ ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டதாக, இத்தாலியின் தீயணைப்புப் படை தெரிவித்தது. அக்கும்மொலியின் மேயரின் தகவலின்படி, ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.

Recommended For You

About the Author: Editor