இலங்கையில் 11.4 வீதமான வீடுகளில் இணையத்தள வசதிகள் இருப்பதாகவும் 9.2 வீதமானவர்கள் இணையத்தள வசதிகளை வழங்கும் நிலையங்களில் அவற்றை பயன்படுத்துவதாகவும் புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய ஆய்வறிக்கையின் படி கொழும்பு மாவட்டத்தில் அதிகளவில் இணையத்தளம் பயன்படுத்தப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் 26.9 வீதமான வீடுகளில் இணையத்தள வசதிகள் உள்ளன. அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 15.2 வீதமானவர்கள் இணையத்தள நிலையங்களில் அவற்றை பயன்படுத்துகின்றனர்.
கம்பஹா மாவட்டத்தில் 16.7 வீதமான வீடுகள் இணையத்தள வசதிகளை கொண்டுள்ளன. அந்த மாவட்டத்தில் 18.9 வீதமானோர் இணையத்தள நிலையங்களில் அதனை பயன்படுத்துகின்றனர்.
இதனை தவிர வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இணையத்தள நிலையங்கள் ஊடாக அதிகளவானோர் இணையத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
வவுனியாவில் 32.1 வீதமானோரும், யாழ்ப்பாணத்தில் 22.3 வீதமானோரும், மன்னாரில் 20.2 வீதமானோரும், கிளிநொச்சியில் 18 வீதமானோரும் மட்டக்களப்பில் 14.5 வீதமானோரும், திருகோணமலையில் 12.7 வீதமானோரும் இணையத்தள நிலையங்கள் ஊடாக இணையத்தளங்களை பார்வையிடுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.