‘ஆவா’ குழுவினருக்கு விளக்கமறியல்

jail-arrest-crimeயாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களென கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ‘ஆவா’ குழுவினரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று உத்தரவிட்டார்.

யாழ். மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்ற கொலை கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்களுடன் தொடர்புடைய 9பேர் கொண்ட ‘ஆவா’ குழு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், 12 வாள்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட இந்தக் குழுவினர், நேற்று மாலை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் என்று கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

‘ஆவா’ குழு தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடவும் – பொலிஸார்