வடமராட்சி பகுதியில் கடலுக்கு புதன்கிழமை (30) இரவு மீன்பிடிக்க 6 படகுகளில் சென்ற 10 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன், வியாழக்கிழமை (01) தெரிவித்தார்.
பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இருந்து மூன்று படகுகளுடன் கடலுக்கு சென்ற ஆறு பேர் இதுவரை கரை திரும்பவில்லை என மயிலிட்டி கடற்றொழில் சங்க செயலாளர் அருள்தாஸ் உறுதிப்படுத்தினார்.
வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து 1 படகுடன் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதுடன், பருத்தித்துறை இன்பர்சிட்டி பகுதியில் இருந்து ஒரு படகுடன் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதை அப் பகுதிகளுக்குரிய மீனவ சங்க பிரதிநிதிகள் உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பில், கடற்படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் கடல்கொந்தளிப்பு அதிகமாக உள்ளதால் காணாமல் போன மீனவர்களை தேடுவதில் கடினமான நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.