ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : இறப்பு எண்ணிக்கை 280 ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் நிலச்சரிவுகள் மற்றும் பல வீடுகள் சேதமடைந்தமையை காணொளிகள் காட்டும் அதேவேளை மீட்பு நடவடிக்கையும் தொடர்கின்றன.

தொலைதூர பகுதிகளில், இருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.

இதேவேளை 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.