ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை

90-களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நதியா திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். தொடர்ந்து சில படங்கள் நதியா, சிறிது காலமாக வாய்ப்பில்லாமல் இருந்தார்.

thiraiku-varatha-kathai-natheya

தற்போது சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கவந்துள்ளார். இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘திரைக்கு வராத கதை’ என்று பெயர் வைத்துள்ளனர். நதியாவுடன் இனியா, ஈடன், கோவை சரளா, ஆர்த்தி, சபிதா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்கள் சேர்ந்து சொந்தமாக இந்த படத்தை எடுத்து வருகின்றனர்.

இப்படத்தை மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் மற்றும் கேரளாவின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படமாக்கிய துளசிதாஸ் இயக்குகிறார். இவர் தமிழுக்கு அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.குமார் பாடல்களுக்கு இசையமைக்க ஆரோல் கொரோலி பின்னணி இசையமைக்கிறார்.

சஞ்சீவ் சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழமுதன், பரிதி, சக்தி கிருஷ்ணா ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். இப்படத்தை எம்.ஜே.டி.புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.மணிகண்டன் தயாரிக்கிறார். ராகுல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இப்படத்தில் ஒரேயொரு காட்சியில் கூட ஆண்கள் நடிக்கவில்லை என்பதுதான்.

கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள் உண்மை சம்பவங்களாக மாறுகிறது. இதன் பின்னணியில் திரில்லர் கதையோட்டத்துடன் சஸ்பென்ஸ், அதிரடி கலந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இம்மாதம் இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor