ஆடிஅமாசை பிதிர்க்கடனுக்கு கீரிமலையில் ஏற்பாடு

sugirthan_tellippalaiஆடி அமாவாசை தினத்தில் பிதிர்க்கடன் நிறைவேற்றவரும் பொதுமக்களின் நலன்கருதி அனைத்து ஏற்பாடுகளும் கீரிமலையில் செய்யப்பட்டுள்ளதாக வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

ஆடி அமாசை தினம் எதிர்வரும் சனிக்கிழமை (26) அனுஷ்டிக்கப்படவுள்ளது. இத்தினத்தில் கீரிமலைக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பொதுமக்கள் வருகை தருவார்கள்.

இதனால், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், மலசலகூடம் உள்ளிட்ட வசதிகள் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும், அன்றைய தினம் அதிகாலை முதல் இரவு வரையிலும் சிற்றூர்திகள் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் ஆகியனவும் குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துச் சபையினர் தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவின் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதுடன், கடலில் குளிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கடலில் கடற்படையினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் என காங்கேசன்துறை பொலிஸ் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor