அரிசி விலை காட்சிப்படுத்தாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் வர்த்தக நிலையங்களில் அரிசிகளின் விலை காட்சிப்படுத்தப்படவேண்டும் என யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரி வசந்த சேகரம் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் நன்மை கருதி யாழ். மாவட்டத்தில் உள்ள வர்தக நிலயங்களில் இதனைப் உடனடியாக பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வர்த்தக நிலையங்களில் வெளியில் காட்சிப்படுத்தப்படும் விலைப்பட்டியல் ஒரு மாதிரியாகவும் உள்ளே விற்பனை செய்யும் விலை வித்தியாசமானதாகவும் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வாறு மோசடியில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.