அரிசி மூட்டைகளை களவெடுத்த அதிபருக்கு எதிராக நடவடிக்கை

arisi-moodaiஅரிசி மூட்டைகளைத் திருடிச் செல்ல முற்பட்ட படசாலை அதிபர் மற்றும் சிற்றூழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென வலிகாமம் கல்வி வலய அலுவலகம் நேற்று அறிவித்தது.

இணுவில் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றின் அதிபரும் சிற்றூழியரும் இணைந்து கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பாடசாலை மாணவர்களின் உணவுத் தேவைக்கென உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட்ட அரிசி மூட்டைகள் மூன்றினை ஆட்டோவில் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இதன்போது, குறிப்பிட்ட கல்லூரி முன்னாலுள்ள வியாபார நிலையத்தின் உரிமையாளர் அரிசி மூட்டைகள் திருடிச் செல்லப்பட்டதை அவதானித்ததுடன் ஓடிச் சென்று ஆட்டோ திறப்பினை பறித்து எடுத்து திருட்டு நடவடிக்கையினை நிறுத்தினார்.

தொடர்ந்து இந்த விடயம் வலிகாமம் கல்வி வலயத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலே குறிப்பிட்ட அதிபர் மற்றும் சிற்றூழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென வலிகாமம் கல்வி வலய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Posts