அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் – அனந்தி

Ananthyவடக்கில் உள்ள அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது என அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

வடமாகாண சபையின் ஆறாவது அமர்வில் அரச திணைக்களங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துஸ்பிரேயோகம் போன்றவற்றை கண்டித்து பிரேரனையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் உள்ள அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் என்பன காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு மாகாண சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் கிளிநொச்சியில் இராணுவத்தினரால் பரமாரிக்கப்படும் விவாசய பண்ணைகளில் வேலை செய்யும் பெண்கள் சிலர் விரும்பபடாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அந்த நடவடிக்கைகளுக்கு தள்ளப்படுகின்றனர். எனவே அவ் விவசாய பண்ணைகளை வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறேன் என தெரிவித்தார்.

அனந்தி சசிதரனின் பிரேரணையை வழிமொழிந்து அவைத் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கில் இவ்வாறன துஸ்பிரயோகங்கள் நடைபெறுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகளை இந்த உயரிய சபை பார்த்து கொண்டு இருக்காது அதுக்கு நடவடிக்கைகள் எடுக்கும் என தெரிவித்தார்.

Related Posts