அரச சேவையில் புதிதாக 6332 பேர் இணைத்துக்கொள்ளப்படுவர்!

அரச சேவையில் புதிதாக 6332 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

jhon-senaveradana

இதன்படி அரச முகாமைத்துவ சேவைக்காக முகாமைத்துவ உதவியாளர் 4429 பேரும், இலங்கை பரிபாலன சேவைக்காக போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சைகளில் சித்தியடைந்த 230பேரும், 111ஆம் தர தொழில் நுட்ப அதிகாரிகளாக 640 பேரும் இவ்வாறு நியமனம் பெறவுள்ளனர்.

அவ்வாறே தேவையின் அடிப்படையில் மொழிபெயர்ப்பாளர்கள் 233 பேரும் நியமிக்கப்படவுள்ளனர்.இவர்களுக்கான நியமனங்கள் மேலும் சில மாதங்களில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.