அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இது அரசிதழில் வெளியிடப்பட உள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டவரைவில் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு நேற்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வரைவு பல தடவைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் கலந்துரையாடிய பின்னர், அமைச்சரவைக்கு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது.