Ad Widget

அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள் வடமாகாண சபையின் அவை தலைவருடன் சந்திப்பு.

c-v-k-sivaganamயாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அமெரிக்கா செனட் சபை உறுப்பினர் டேமியன் மேவி, இராஜாங்கத் திணைக்கள அதிகாரி மரியா ரெகோ மற்றும் மைக்கல் கொனேக் ஆகியோர் வடமாகாண சபையின் அவை தலைவர் சீ.வீ. கே சிவஞானம் அவர்களை ஞாயிறு இரவு சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரவித்த சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள்.

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அமெரிக்கா செனட் சபை உறுப்பினர் டேமியன் மேவி , இராஜாங்கத் திணைக்கள அதிகாரி மரியா ரெகோ மற்றும் மைக்கல் கொனேக் ஆகியோர் நான் சந்தித்திருந்தேன். அந்த சந்திப்பில் மாகாணசபை எதிர் நோக்க கூடிய பிரச்சனைகள் மற்றும் பொதுவான சில பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர் கொள்கின்ற பிரச்சனைகள் பற்றி பேசியிருந்தோம்.

நான் குறிப்பாக நில ஆக்கிரமிப்பு பற்றி சுட்டிக்காட்டியிருந்தேன். அதுவும் குறிப்பாக எமது வடக்கிலே புராதன இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவது கல்லூரிகள் அழிக்கப்படுவது தனியாரினுடைய கட்டடங்கள் உடைக்கப்படுவது அழிக்கப்படுவது போன்ற விடயங்கள் அடிப்படை மனித உரிமையை மீறுகின்ற செயல் என்பதை சுட்டிக்காட்டினேன்.

அதற்கும் மேலாக வன்னிப்பகுதியிலே மிக தீவிரமாக மக்களினுடைய காணிகள் தனிப்பட்ட காணிகள் கூட ஆக்கிரமிக்கப்படுவதும் அரச காணிகளிலே மாகாணசபைக்கான காணி அதிகாரம் ஒதுக்கப்படுவதோ இல்லையோ அங்கே இருக்கின்ற ஏற்பாடுகளின் படி வட மாகாணத்திலே இருக்கக் கூடிய காணிகளை பகிர்தளிக்க அல்லது யாருக்கேனும் வழங்குகின்ற பொழுது ஆகக் குறைந்தது மாகாண சபையினுடைய அனுசரனையை ஒப்புதலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஏற்பாடு மாகாண சபைச் சட்டத்திலே இருக்கின்ற பொழுது அவ்வாறு செய்யாமல் அரசாங்கம் தானும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இந்த காணிகளை மாகாணத்தைச் சேராதவர்களுக்கு மாகாண சபை சட்டத்திற்கு முரணாக வழங்கி வருகிறார்கள். குறிப்பாக நான் ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டியிருந்தேன்.

வவுனியாவிலே சீனி உற்பத்திக்கான ஒரு தொழிற்சாலைக்காக பத்தாயிரம் ஏக்கர் வரையிலே அது ஒரு அரசாங்க கம்பனி என்று சொல்லப்படுகின்ற கம்பனிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கிறது. அதே போல கிளிநொச்சியில் பத்தாயிரம் ஏக்கர் அதுவும் தனியார்களுக்கும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் சொந்நமான காணியை கஜு உற்பத்திக்காக வழங்குகின்றதாக தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த இரண்டிலுமே ஒரு இருபதாயிரம் ஏக்கர் காணி தமிழ் மக்களினுடைய காணி மாகாண சபையினுடைய அங்கிகாரம் அனுமதி ஒப்புதல் இல்லாமல் வழங்குகின்ற இதே மாதிரியான பல நிகழ்வுகள் இடம்பெறுவதை நான் மேலாக பல காணிகள் தனியாரினுடைய காணிகளை இராணுவத்திற்கு சொந்தமானது என்று வேலியிட்டு அடைத்து ஆக்கிரமித்து வைப்பதும் ஒரு அடிப்படை மனித உரிமை மீறலான செயல் என்று சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதே போல மாகாணசபை நிர்வாகத்தை பொறுத்த வரையிலே எங்களுக்கு நிதி ஆணைக்குழு வழங்குகின்ற தொகை சராசரியான ஒரு ஏற்பாடு என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ளுகின்றோம். ஆனால் நாங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசம் ஒரு மாகாணம் முப்பது வருடமாக பின்னடைவை சந்தித்த ஒரு மாகாணம் என்ற வகையிலே எங்களுக்கு இந்த மாகாணத்திற்கு கூடுதலான ஒரு விசேட நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும் செய்யாததை சிந்தித்திருக்க வேண்டும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள் அனாதைகள் விவசாயிகள் மீனவர்கள் போன்றவர்களினுடைய வாழ்வாதார மேம்பாட்டிற்கு இந்த மாகாணசபை உதவும் என்று மக்கள் எதிர்பார்கின்றார்கள். ஆனால் அவ்வாறு செய்வதற்கான நிதி வசதி எங்களிடம் இல்லாதவொரு நிலை எங்களிடம் இருக்கின்றது. அதை அரசாங்கம் கருத்திற் கொண்டிருக்க வேண்டும் அல்லது இனிமேலாவது கருத்திற் கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

மேலும் நிர்வாகத்தைப் பொறுத்த வரையிலே ஆரம்ப நிலையாக இருக்கின்ற காரணத்தினால் சில முரண்பாடுகள் தோன்றுகின்றது என்பது உண்மை தான் அதை நாங்கள் ஒரு நியாயமான முறையில் சாதூரியமாக கையாண்டு இந்த அரசாங்கம் ஏதோவொரு சாட்டுப் போக்கிலே அல்லது சில பேர் இந்த மாகாணசபையை முடக்கிவிடலாம் அல்லது முடக்கிவிட எடுக்கின்ற எல்லா நடவடிக்கைகளையும் நாங்கள் நிச்சயமாக எதிர்கொள்வோம் என்றும் அதை முறியடித்து மாகாணசபையை பாதுகாத்து தமிழ் பேசும் மக்களினுடைய முழுமையானதொரு மாகாணசபையை பாதுகாத்து செயற்படுத்துவதற்கான முயற்சிகள் எங்களால் எடுக்கப்படும் என்றும் அதற்கான பொறுமையான சில நகர்வுகளை நாங்கள் எடுக்கின்றோம் என்றும் சொல்லியிருந்தேன்.

குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய சிபாரிசினிலே அல்லது கருத்திலே தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான உண்மையான குறைபாடு இருக்கிறது என்பதை அந்த கருத்தை இந்த அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும் அதன்படி அவர்களின் சிபாரிசின் அடிப்படையிலாவது ஒரு தீர்வு முன் வர வேண்டும். குறிப்பாக ஒரு அரசிடம் தீர்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கென்று ஒரு அழுத்தம் கொடுப்பது ஒரு தந்துரோபாயமான நிகழ்வு என்றும் எந்தச் சந்தர்ப்பத்திலே நாங்கள் அதற்கு வரமுடியாது என்று சொன்னோமோ அந்த சந்தர்ப்பத்திலே அதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இந்த பேச்சு வார்த்தையை இந்த அரசாங்கம் இழுத்தடிக்கின்றது.

ஆகவே சர்வதேசம் இதிலே கவனம் செலுத்த வேண்டும் குறிப்பாக ஜக்கிய நாடுகள் நிறுவனம் அமெரிக்கா மேற்கத்தைய நாடுகள் இதிலே கூடிய அக்கறை எடுத்து ஒரு தீர்வுக்கான முன் முயற்சியை அரசாங்கத்திற்கு உந்து செயலாக தூண்டுதலாக செயற்பட வேண்டும் என்று கோரிக்கையை நான் விடுத்திருந்தேன்.

Related Posts