அன்ரனி ஜெகநாதனின் உடல் இன்று நல்லடக்கம்!

வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் மரியாம் பிள்ளை அன்ரனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு இன்றைய தினம் வடக்கு மாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

அவருடைய பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வின் ஆரம்பத்தில் உயிரிழந்த பிரதி அவைத்தலைவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் 11 மணியளவில் சபை நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

அதேவேளை அன்னாரின் திருவுடல் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் (முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்னால்) பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் முல்லைத்தீவு புனித இராயப்பர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் உண்ணாப்புலவு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor