கத்தி படத்தின் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. விமர்சகர்கள் படத்தின் பின்னணி இசை குறித்து எதிர்மறை விமர்சனத்தை முன் வைத்தாலும் விஜய் ரசிகர்களை பின்னணி இசையும் குதூகலப்படுத்தவே செய்கிறது.
கத்தியின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து அனிருத்துக்கு விஜய் பியானோ ஒன்றை பரிசளித்தார். இது பற்றி ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ள அவர், விஜய்க்கு நன்றியும் கூறியுள்ளார்.