அனலைதீவுக்கான போக்குவரத்து சேவை நிறுத்தம்!!

அனலைதீவு பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலில் ஈடுபடும் இருவர் இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் அனலைதீவு பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக முதல் கட்டமாக யாழ்ப்பாணம் – அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கடற்படையினரின் உதவியுடன் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor