அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த கடற்படை வீரருக்கு பிணை

வெற்றிலைக்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கடற்படை வீரரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (20) உத்தரவிட்டார்.

அத்துடன், மேற்படி வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
மீனவக் குடும்பமொன்றின் வீட்டிலே மேற்படி கடற்படை வீரர், கடந்த 13ஆம் திகதி அதிகாலையில் அத்துமீறி நுழைய முற்பட்டவேளை, ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

தொடர்ந்து, பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கடற்படை வீரர், கிளிநொச்சி நீதிமன்றத்தால் நேற்று (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தொடர்ந்து, மேற்படி வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபருக்கு நீதவான் பிணை வழங்கினார்.

Recommended For You

About the Author: Editor