அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைய வாய்ப்பு!

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைய வாய்ப்புள்ளதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு எதிர்பார்ப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை ஆரம்பிக்க முடியும் என அதன் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.