அண்மைய நாள்களில் கோவிட்-19 தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

அண்மைய நாள்களில் கோவிட்-19 தொற்றுநோயாளர்கள் எண்ணிக்கை அதிகமாக அடையாளம் காணப்படுகின்றனர் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

அதன்படி, சிகிச்சைப் பிரிவுகளில் ஒக்ஸிஜனின் தேவை அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட இடம் இப்போது நிறைவடைந்துள்ளதாக பல மருத்துவமனைகளில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

இதேவேளை, ஆசிரியர்களின் போராட்டத்தின் மூலம் கோவிட்-19 நோய்த்தொற்று தங்கள் உயிரைப் பறிக்க அதிக வாய்ப்புள்ளது என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவிட் -19 வைரஸ் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை அறிந்திருக்கவில்லை என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டினார்.

இதன்மூலம் மக்களுக்கு தவறான முன்மாதிரி அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor