அஜீத் படத்தில் 3வது நாயகியாக நடிக்கும் பார்வதி நாயர்

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அனைவரும் தல 55 என்று அழைத்து வருகின்றனர். இப்படத்தில் நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள். இந்நிலையில் 3வது நாயகியாக பார்வதி நாயர் நடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

ParvathiNairAjithstarrer

இவர் மலையாளம், கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். மேலும் கமல் நடித்து வரும் ‘உத்தம வில்லன்’ படத்திலும் 3வது நாயகியாக நடித்துள்ளார். தற்போது அஜீத் படத்திலும் 3வது கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் காமெடி வேடத்தில் விவேக் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் அருண்விஜய் நடித்துள்ளார்.