அஜித்தின் செயலை கண்டு ஆச்சரியத்தில் அதிர்ந்த விவேக்!

அஜித் பற்றி நாளுக்கு நாள் எதாவது ஒரு செய்தி வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் தற்போது வந்துள்ள செய்தி அதை கூறிய நடிகர் விவேக் மட்டும் இல்லை கேட்கும் நமக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

ajith_vivek003

தற்போது தல-55 படத்தின் ஷுட்டிங்கிற்காக படக்குழுவினர் சிக்கிம் சென்றுள்ளனர். அஜித்தும், விவேக்கும் ஒரே பக்கத்து பக்கத்து சீட்டில் தான் உட்கார்ந்து சென்றுள்ளனர்.

அப்போது அஜித் தன் கையில் இருந்த விலை உயர்ந்த கடிகாரத்தை கழட்டி, விவேக் கையில் கட்டி ‘இனி உங்க டைம் சூப்பரா இருக்கும்’ அப்படின்னு கூறினாராம்.

அதோடு நிற்கவில்லை அவர்கள் செல்லும் காரின் ட்ரைவர் மிகவும் மட்டமான ஒரு போனை வைத்து கஷ்டப்பட்டு பேசி வந்தாராம். இதை கவனித்த அஜித் ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்துங்க என்று கூறி தன்னிட இருந்த ஐ போன் ஒன்றை அவரிடம் கொடுத்து, இப்படி கார் ஓட்டும்போது ஹெட் போன் போட்டுக்கங்க. அதுதான் நல்லது என்று கூறி ஹெட் போனையும் அந்த டிரைவருக்கு கொடுத்துள்ளார்.

இதை கண்ட விவேக் ஆச்சரியத்தில் அதிர்ந்து என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றாராம். இதை தன் நெருக்கமான பத்திரிக்கை நிருபர்களிடம் மட்டும் விவேக் கூறியுள்ளார்.