அச்சுவேலி முக்கொலை சந்தேகநபர் தற்கொலைக்கு முயற்சி?

அச்சுவேலி, கதிரிப்பாயில் இடம்பெற்ற முக்கொலைக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் விளக்கமறியலில் இருந்துவரும் தனஞ்செயன் அதிக மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்
என்றுதெரிவிக்கப்படுகிறது.

Achchuvely-crime

இவர் நெஞ்சுவலி காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன்போது வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர் அதிக மாத்திரைகளை உட்கொண்டிருந்தமை தெரியவந்தது என்று வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

யாழ்.அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் கடந்த மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் என மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர். இவர்களை படுகொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தனஞ்செயன் கைதுசெய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்று ஊடாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.