Ad Widget

கூட்டமைப்பிடம் ஆதரவு கோரியுள்ள எதிரணி

ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய உடன்பாடு ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது. இவ்வாறு எதிரணியில் பௌத்த கடும்போக்கு அமைப்புகள் என்று கருதப்படும்...

மைத்திரிபால சிறிசேன ராஜபக்‌ச படையணியை விரட்டுவார் – ரணில்

ராஜபக்‌ச படையணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மைத்திரிபால சிறிசேனவை நாம் பொது வேட்பாளராகக் களமிறக்கிப் போராட்டம் செய்கின்றோம், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கெளதம புத்தர் சமாதானமாக ஒன்று கூடுங்கள், சமாதானமாகப் பேசுங்கள், சமாதானமாகக் கலைந்து செல்லுங்கள் எனப் போதனை செய்தார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தலைமையிலான அரசினர்...
Ad Widget

அன்னம் சின்னத்தில் போட்டியிடுகிறார் மைத்திரி!

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும், மைத்திரிபால சிறிசேன சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல்கள் செயலகத்தில் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியில் அன்னம் சின்னத்தில் மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

சர்வதேச தரத்தில் யாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம்

சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை யாழ். அரியாலைப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜோசப் ஷெப் பிளாட்டர் பிற்பகல் 1.50 மணியளவில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், மத்திய...

தேசிய கல்வியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியல் பாடங்களை அடுத்த ஆண்டுமுதல் கற்பிக்க நடவடிக்கை – டக்ளஸ்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியல் பாடங்களை அடுத்த ஆண்டுமுதல் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, மேலும் கல்லூரியின் வளங்களை மேலும் நிறைவு செய்து சிறப்பான வளங்களோடு இயங்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு...

இயற்கையால் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – ஈ.பி.டி.பி

இயற்கை தாண்டவத்தால் பாதிப்புக்குள்ளான ஏழை மக்களின் அன்றாட வாழ்வியலை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒருபோதும் விரும்புவதில்லை என அந்த கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட வலி.வடக்கு மக்களை திங்கட்கிழமை (01) மாலை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர்,...

சுகாதார தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ். மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் மாநகர முன்றலில் பணி புறக்கணிப்பு போராட்டமொன்றை இன்று (02) மேற்கொண்டனர். சுகாதார தொழிலாளர்களாகிய தங்களை வீதி புனரமைப்பு வேலைக்கு அனுப்பியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை சுகாதார தொழிலாளர்கள் மேற்கொண்டனர். இது தொடர்பில் தெரியவருதாவது, யாழ். மாநகர சபையின் சுகாதார பணிமனையில் பணியாற்றுவதற்காக 22 பெண், 55...

வீதியில் உணவு சமைத்து போராட்டம்

யாழ்ப்பாணம், பொம்மாவெளி, முதலாம் குறுக்குதெரு ஜே - 87 கிராமஅலுவலர் எல்லைக்குட்பட்ட முஸ்லிம் மக்கள், வீதியில் உணவு சமைத்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை (02) முன்னெடுத்தனர். கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அன்றாட உணவுகளை...

ஜனாதிபதி – டோவல் சந்தித்து பேச்சு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாக்டர் அஜித் குமார் டோவல் இன்று செவ்வாய்கிழமை(02) காலை கொழும்பிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்து பேசினார். இதன்போது இலங்கை - இந்திய உறவுகள் தொடர்பில் டோவல் திருப்தி தெரிவித்துள்ளதுடன் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியுள்ளார்.

விஜய்யின் 60வது படத்தை இயக்கும் கே.வி.ஆனந்த்?

இளையதளபதி விஜய் நடிக்கும் 60 வது படத்தினை கே.வி.ஆனந்த் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது. அப்படத்தின் வெளியிட்டு வேலைகளில் பிசியாக இருக்கிறார் கே.வி. ஆனந்த். இதற்கிடையில் விஜய்யின் 60வது படத்தை இயக்கப்போவதாக கே.வி. ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்....

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ எம்.என்.ஜே புஷ்பகுமார குறிப்பிட்டார். விடைத்தாள்களின் புள்ளிகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக அவர் கூறினார். இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண...

இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை!

இலங்கைக்கு செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் இந்த எச்சரிக்கையை நேற்று விடுத்துள்ளது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் தேர்தல் பிரசாரங்கள் என்பவற்றில் இருந்து விலகி இருக்குமாறு பிரித்தானிய பிரஜைகள் கோரப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது...

தொடர்ந்து கொட்டும் மழையால் யாழ்.மாவட்டத்தில் 32 ஆயிரம் பேர் பாதிப்பு!

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக யாழ்.மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 47 குடும்பங்களைச் சேர்ந்த 32 ஆயிரத்து 647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் 501 குடும்பங்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளன. யாழ். மாவட்டத்தில் உள்ள 11 முகாம்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்னர். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 4 முகாம்களிலும், யாழ்....

யாழ் உப இந்திய தூதரகத்திற்கு புதிய கொன்சியுலர் ஜெனரல்

கடந்த மூன்று வருடங்களாக கண்டி இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிய ஏ.நடராஜா யாழ் இந்திய துணைத் தூதரககத்தின் கொன்சியுலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் யாழ் உப உயர்ஸ்தானிகராலயத்தில் பதவியேற்கவுள்ள அவர் கண்டியில் பணியை நிறைவு செய்ததன் பின்னர் கண்டி மாவட்டச் செயலாளர் எச்.எம். காமினி செனவிரத்னவை சந்தித்து சேவை காலத்தில்...

சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது தடுக்கப்படல் வேண்டும் – சூசையானந்தன்

சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது சட்டபூர்வமாக தடுக்கப்பட வேண்டும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார். சிறுவர் தொழிலாளர்கள் பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சிறுவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். கடற்றொழில் மிகவும் கடினமான ஒரு தொழில். சிறுவர்கள்...

டெங்கு ஒழிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்!

இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் இளவாலை கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தபட்டு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. கிராம மக்கள் அனைவருக்கும் ஒலிபெருக்கி மூலமாக டெங்கு நுளம்பு பெருக தக்க கழிவுப்பொருட்களை சேகரித்து பொதி செய்து வைத்துகொள்ளுமாறு முன்னதாகவே அறிவுறுத்தபட்டு, வலிவடக்கு பிரதேச சபையின் வாகனத்தின் உதவியுடன் வருத்தப்படாத வாலிபர் சங்க...

கூட்டமைப்பினரை சந்தித்த அஜித் டோவால்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மாலை இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுடனான சாந்திபில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன்போது...

எனது அரசில் குறைகள் உண்டு – மகிந்த

ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள் அரசிற்கு விரோதமான வகையிலேயே இவர்கள் தகவல்களை வெளியிடுகின்றனர். நீதிமன்றின் நடவடிக்கைகளுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் தலை வணங்குகின்றேன்....

மனிதாபிமானப் பணியால் மக்கள் மனம் வென்ற அப்பிள் நிறுவனம்

நேற்றைய தினம் எயிட்ஸ் நோய்க்கான விழிப்புணர்வு தினமாக உலகெங்கிலும் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு அப்பிள் நிறுவனம் தனது ஒவ்வொரு நிலையங்களிலிருந்தும் விற்பனை செய்யப்பட்ட சாதனங்கள் மூலம் பெறப்பட்டா இலாபத்தில் ஒரு தொகையை நன்கொடையாக வழங்கியிருந்தது. அத்துடன் தனது நிறுவனத்தில் உள்ள லோகோவை சிவப்பு நிறத்தில் மாற்றியமைத்திருந்தது. இதேவேளை எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய RED எனும்...

வியாபாரிமூலையில் 23 குடும்பங்கள் இடம்பெயர்வு

பருத்தித்துறை, வியாபாரிமூலை கிராமத்திலுள்ள வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததால் 23 குடும்பங்கள் இடம்பெயர்ந்து, அருகிலுள்ள தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பருத்தித்துறை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இக்கிராமத்துக்கு பின் பகுதியில் சிறு பயிர்ச்செய்கை செய்கின்ற விவசாய...
Loading posts...

All posts loaded

No more posts