Ad Widget

காணாமற்போனவர்களை மீட்டுத் தரக்கோரி நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம்!

காணாமற்போனவர்களை மீட்டுத் தரக்கோரியும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் இன்று வெள்ளிக்கிழமை காலை நல்லூர் ஆலயச் சூழலில் உண்ணாவிதப் போராட்டம் ஆரம்பமாகியது. காணாமற்போனோரின் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டத்துக்கு பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காணாமற்போன ஒருவரின் மனைவி என்ற அடிப்படையில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்...

வடக்கில் புதிய கட்சி அங்குரார்ப்பணம்

ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி வடக்கில் புதிய கட்சியொன்று நேற்று வியாழக்கிழமை (5) உருப்பெற்றுள்ளது. ந.தேவகிருஸ்ணனை செயலாளர் நாயகமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'தொழிலாளர், விவசாயிகள் வாழ்வுரிமைக் கட்சி' வவுனியாவில் வைத்து அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மிகவும் பதற்றத்துடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நிறைவேறியது....
Ad Widget

கர்ப்பிணிகளுக்கு பகுதி பகுதியாக கொடுப்பனவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்ட கர்ப்பிணிகளுக்கான 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்படும் என்று அமைச்சரவைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு 2,000 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

நிம்மதியற்று இருக்கிறோம்; காணாமற்போனோரின் உறவினர்கள்

காணாமற்போனோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்துக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (06) காலை 9 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கைது செய்யப்பட்டு காணாமற்போனோர், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் ஒப்படைக்கப்பட்டு காணாமற்போனார் ஆகியோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. குடும்பத்திலுள்ள ஒரு உறுப்பினர்...

நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய, எதிர்வரும் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் முறைமையில்...

இலங்கைக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம்; எச்சரிக்கிறார் ஐ.நா ஆணையாளர்

பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆலோசித்தே உள்ளக விசாரணைப் பொறிமுறை ஆரம்பிக்கப்பட வேண்டும். மாறாக கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட தோல்வியில் முடிந்த விசாரணைப் பொறிமுறையினை அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என ஐ.நா மனித மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹீசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 28ஆவது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. அதில்...

“ஆவணப்படம் அவமானமல்ல; அதன் மீதான தடையே அவமானம்”

இந்தியத் தலைநகர் டில்லியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் எங்கும் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்த இந்திய அரசு, அந்த காணொளியை யூடியூபிலும் நீக்கும் முயற்சிகளை முன்னெடுத்ததாகவும், அதன் விலைவாக அந்த காணொளி யூடியூபில் இருந்து நீக்கப்ப்படுவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணப்படத்துக்கு எதிரான இந்திய அரசின் இந்த...

சமீபத்தில் உலகை உலுக்கிய நிகழ்வை படமாக்கும் கமல்

கமல்ஹாசன் படைப்புகள் எப்பொழுதுமே தனித்துவம் வாய்ந்தே இருக்கும். கடந்த வாரம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற உத்தம வில்லன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் கமல் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான், உத்தம வில்லன், விஸ்வரூபம் -2 , பாபநாசம் ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ்க்கு ரெடி ஆகியுள்ளன. இந்நிலையில் கமல்...

காஞ்சனா 2 – 15 பையனாக நடித்துள்ள லாரன்ஸ்

காமெடி கலந்த பேய்கதை என்ற புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்த படம், லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா. அதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 10 வெளியாகிறது. இந்தப் படத்தில் லாரன்ஸ் மொத்தம் 4 தோற்றங்களில் நடித்துள்ளார். 15 பையனாக, 25 வயது இளைஞனாக, 45 வயது மத்திய வயதுக்காரராக, 60 வயது கிழவராக என 4...

ஒரு டிக்கெட்டில் ஆறு குறும்படங்கள்: கார்த்திக் சுப்பாராஜின் புதிய முயற்சி

‘பீட்சா’ மற்றும் ‘ஜிகர்தண்டா’ என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கி திரையுலகில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்திய இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ். இவர் மற்றும் இவரது நண்பர்கள் ஒன்றாக இணைந்து சுயமாக திரைப்படம் எடுப்பவர்கள், தனித்திறமைகள் மிளிர நடிக்கவேண்டும் என்று தாகமுள்ள நடிகர்கள் ஆகியோருக்கு துணைக்கரம் நீட்டும் வகையில், பொழுதுபோக்குத் துறையில் ‘ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ்’ என்ற...

வடக்கில் புனர்வாழ்வு வைத்தியசாலை அமைக்கத் திட்டம்

போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களிற்கு 1300 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலையொன்றை மாங்குளத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இம் மாகாணத்தில் 2014ம் ஆண்டிற்கான சிறந்த சுகாதார சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வு யாழில் நேற்று நடைபெற்றது. இதன்போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சத்தியலிங்கம் இவ்வாறு...

அனந்தி நாளை முதல் தொடர் உண்ணாவிரதம்

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாளை வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 09.00 மணிக்கு இவ்வாறு போராட்டத்தினை அவர் ஆரம்பிக்கவுள்ளார். வட பகுதியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள், இராணுவத்தில் சரணடைந்த காணாமல் போனவர்கள் உட்பட மீள்குடியேற்றம் போன்ற...

காங்கேசன்துறையில் அமைக்கப்படுவது ஜனாதிபதி மாளிகை அல்ல! – மஹிந்த

தனது பயன்பாட்டிற்காக காங்கேசன்துறை பகுதியில் ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் அது சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்காக அமைக்கப்பட்ட கட்டிடம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 1980ம் ஆண்டு...

20 வீதம் விலை குறைத்தே உணவுவகைகளை விற்கவேண்டும் – யாழ்.வணிகர் கழகம் கோரிக்கை

யாழ்.மாவட்ட உணவகங்களில் கடந்த காலத்தில் விற்பனை செய்ததை விட 20 வீதம் விலை குறைத்து உணவுவகைளை விற்பனை செய்ய அனைத்து உணவகங்களினதும் உரிமையாளர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் - இவ்வாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் கழக அலுவலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள்...

காணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில் – வடக்கு முதலமைச்சர்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பலர் இலங்கையின் பல இடங்களில் உள்ள இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக வடக்கு முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். காணாமல் போனவர்களின் உறவுகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்ததுடன் அரச அதிபர் ,...

கொக்குவில் இந்து கலையரங்கிற்கு விசமிகளால் தீ வைப்பு

கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்திலுள்ள மாலதி கலையரங்கிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இன்று விடுமுறை தினம் என்பதால் காலை பாடசாலைக்கு எவரும் சமுகமளித்திருக்கவில்லை. இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு விசமிகள் இந்த வேலையை செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் உடனடியாக யாழ். மாநகர சபை தீயணைப்புப்...

சில்லறைக்கு தட்டுப்பாடு; மத்திய வங்கியுடன் பேச நடவடிக்கை

வர்த்தகர்களுக்கு சில்லறை ப்பணத்தினை வழங்குவது குறித்து வங்கிகளுடனும் மத்திய வங்கியுடனும் பேச்சு வார்த்தை நடாத்த திட்டமிட்டுள்ளோம் என யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தலைவர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். வர்த்தக சங்கத்தினருக்கும் யாழ்ப்பாண வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று வர்த்தக சங்கத்தின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன் போதே இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

உள்நாட்டு விசாரணைக்கு பொன்சேகா சம்மதம் குற்றவாளிகளை தண்டிக்கவும் உறுதி

இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஒரு உள்நாட்டு விசாரணை நடப்பதை தான் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை ஒன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதே தமது...

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை புதிய அரசாங்கம் தர வேண்டும்!

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர அரசியல் தீர்வை வழங்க புதிய அரசு முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில்...

அசத்தும் மாஸ் சூர்யா

சூர்யா நடிக்கும் மாஸ் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கலக்கலாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் சில யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. ஸ்டைலிஷான ஹேர் ஸ்டைல், இரண்டுநாள் தாடி மீசை, கூலிங்கிளாஸ், காதில் ஸ்டட் என சூர்யாவின் தோற்றம் கலக்கலாக உள்ளது. அவர் அணிந்திருக்கும் கூலிங் கிளாஸில் ரூபாயின் சின்னம் பிரதிபலிக்கிறது. மங்காத்தாவில் அஜீத் செய்தது போன்று கொஞ்சம்...
Loading posts...

All posts loaded

No more posts