பேடன் பவல் சிலையை புனரமைக்க ஆளுநர் நிதியுதவி

யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அமைந்துள்ள சாரணியத்தின் நிறுவுனர் பேடன் பவலின் சிலையை புனரமைக்க வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்களால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. Read more »

கோட்டா முறையில் மாற்றம் யாழ்.மாணவருக்கு பாதிப்பு??

பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி தொடர்பில் நடைமுறையில் இருக்கும் மாவட்டக் கோட்டா முறை மாற்றப்பட்டால், அண்மைய சனத் தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம் யாழ். மாவட்டத்தில் இருந்து பல் கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர் எண்ணிக்கையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. Read more »

குருநகரில் காணாமல் போன சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார்

யாழ், குருநகரில் காணாமற்போனதாக கூறப்பட்ட 17 வயது சிறுவன் ஞாயிறு இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அவரது சகோதரனினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். Read more »

யாழ். சிறையிலிருந்து 9 கைதிகள் விடுதலை

யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் 9 பேர் இலங்கையின் 65ஆவது சுதந்திரதினத்தையொட்டி திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more »

பெப்ரவரி 12 இல் ஜனாதிபதி யாழ். விஜயம்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்தார். Read more »

2 கோடி ரூபா மோசடி: பாதிரியார் கைது

2 கோடி ரூபாவிற்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பாதிரியார் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறியே குறித்த பாதிரியார் Read more »

யாழில் யுவதி எரிந்து மரணம்

எரியுண்ட நிலையில் 19 வயது யுவதியொருவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Read more »

வாழ்வாதாரத்தை மேம்படுத்த யாழ். வணிகர் கழகம் கடனுதவி

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் யாழ். வணிகர் கழத்தால் வாழ்வாதார கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. Read more »

வலி – வடக்கில் படிப்படியாக மீள்குடியேற்றம்: நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர்

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் படிப்படியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடரும் என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். Read more »

மாவை, கலட்டி குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பம்

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாவை, கலட்டி பகுதிகளில் ஐ.நாவின் அகதிகள் உயர்தானிகராலயத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் திட்டம் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. Read more »

கொல்லங்கலட்டிக்கு மின் விநியோக திட்டம்

யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கொல்லங்கலட்டி பிரதேசத்திற்கான மின் விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. Read more »

அதிவிசேட சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

வடமாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதிவிசேட சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. Read more »

விஸ்வரூபம் வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகும்: இலங்கையிலும் விரைவில்!

‘விஸ்வரூபம்’பெப்ரவரி 7ஆம் தேதி (வியாக்கிழமை) வெளியாகிறது. இதை கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இது குறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தடை பல கடந்து உங்கள் விஸ்வரூபம் வரும் வியாக்கிழமை 7ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.நீதி சற்றே நின்று வந்தாலும் அன்றே ஆனவனவெல்லாம் செய்து,... Read more »

மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை

சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக... Read more »

“திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கமே வெளிநாட்டு படைகளுக்கு இருந்தது.-மகிந்த

நாட்டின் 65ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவம் திருகோணமலையில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அங்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்து படைகளின் தளபதிகளுக்கு முன்பாக நின்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more »

250,000 ‘ட்விட்டர்’ சமூக வலைத்தள பயனாளர்களின் தகவல்கள் திருட்டு

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் தளத்துக்குள் ஊடுருவி சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் பற்றிய தகவல்களை ஹக்கர்ஸ் கும்பலொன்று திருடிச் சென்றுள்ளதாக என்று அத்தளம் அறிவித்துள்ளது Read more »

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான இசை நிகழ்ச்சி

வன்னியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு சென்.ஜோன்ஸ் கல்லூரியில் கல்விகற்கும் 450 மாணவர்களுக்கு கல்வி வசதிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக, A.E.மனோகரன் இசைக் குழுவினரால் இசை நிகழ்ச்சியொன்று சென்.ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெறவுள்ளது. Read more »

உயர்தரப் பரீட்சையில் 9057 பேர் 3 பாடங்களிலும் ”ஏ” சித்தி

2012 ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த 128,809 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளனர். Read more »

முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கிணற்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீராவியடியைச் சேர்ந்த 54 வயதான அபூர்வசிங்கம் சிறிகாந்தனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. Read more »

உள்ளூர் உற்பத்திகளுக்கு புதிய சந்தை வாய்ப்பு

உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து உற்பத்திப் பொருள்களை உல்லாசப் பயணிகள் நேரடியாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாணச் சுற்றுலாத்துறை ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளது. Read more »