கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – வியாழேந்திரன்

சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலே தான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.... Read more »

பதவியைத் துறக்கத் தயாராகவிருந்தேன் ஆனால் வன்முறையால் என்னை வெளியேற்ற முடியாது – மகிந்த

“நாடாளுமன்றில் சட்டரீதியாக எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறக்க தயாராக இருந்தேன்” என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். பலாத்காரமாக அல்லது வன்முறைகளால் என்னை வெளியேற்றுவது இலகுவான காரியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வீரகெட்டியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற... Read more »

இன்று மாலை கூட்டமைப்பு எம்.பிக்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி?

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்புவிடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் நெருக்கடிகள் மற்றும் நாடாளுமன்றில் இரண்டாவது தடவையாக நிறைவேற்றப்பட்ட... Read more »

வடமராட்சியில் வாள்வெட்டுக் குழுஅட்டகாசம்

வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், குழப்பத்தில் ஈடுபட்டுள்ளது. கஜா புயல் தாக்கம் ஏற்பட்ட நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் இமையாணன் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முகமூடிகளை அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு வாள்களுடன் மோட்டார்... Read more »

கஜாவைத் தொடர்ந்து வருகின்றது பேத்தை?

வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான கஜா புயல், தமிழகத்தைவிட்டு நகர்ந்து இன்று மாலை அரபிக் கடலை அடைகிறது.தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8ஆம் திகதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து,... Read more »

கஜா புயல்: யாழில் 700 குடும்பங்கள் பாதிப்பு!

கஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். கஜா புயல் தொடர்பாக நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யாழ். மாவட்டத்தில் நிலைக்கொண்டிருந்த... Read more »

நாடாளுமன்றில் பொலிஸார் மீதும் கடும் தாக்குதல்!

நேற்றையதினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது மகிந்த ராஜபக்ச தரப்பினர் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தினர். குறிப்பாக பொலிஸார் மீதான தாக்குதலில் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த... Read more »

ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை!

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவி நீக்கம் செய்யாவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை)... Read more »

ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு

“ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்த சந்திப்பு... Read more »

நாடளாவிய ரீதியாக மழையுடன் கூடிய வானிலை நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00... Read more »

பிரதமர் பதவியில் தொடர மகிந்தவுக்கு அருகதையில்லை – சம்பந்தன்

மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். “மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக மீண்டும் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர் இனிமேலும் பிரதமராகப் பதவி வகிக்க முடியாது, உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவரது... Read more »

நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற அமர்வுகள் 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வுகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நேற்று முன்தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. ஆனால், அன்றைய தினம் நாடாளுமன்றத்தில்... Read more »

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மீது மிளகாய்த்தூள் தாக்குதல்!

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரச தரப்பினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் இவ்வாறு மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more »

மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: வவுனியாவில் பதற்றம்

வவுனியாவில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலர் குழப்பம் விளைத்து மோதலில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைக்கு வழங்கப்படுகின்ற சத்துணவு திட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்தமைக்கு எதிராக வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.... Read more »

யாழில் ஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த தாய்!

ஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.இந்தத் துயரச் சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் ( 14.11.2018) இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த குறித்த தாய் திருமணமாகி நீண்டகாலமாக குழந்தைப் பாக்கியம் கிடைக்காததால் கடந்த வருடம் இந்தியாவில்... Read more »

வடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்: மனோ

தற்போதைய அரசியல் சூழ்நிலை பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் வடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம் எனவும முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்குள் நேற்று (வியாழக்கிழமை) நிலவிய குழப்பகரமான சூழல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர்... Read more »

ஐ.ஓ.சி.யும் எரிபொருள் விலையை குறைத்தது!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைவாக நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைப்பை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது. அதன்படி ஒரு லீட்டர் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் விலை... Read more »

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் இலங்கையில் நிலைக்கொண்டது!

தமிழகத்தில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள கஜா புயல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையின் வடக்கு, வடமேற்கு திசையில் காங்கேசன் துறையிலிருந்து சுமார் 75 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கஜா புயல் அடுத்த 6... Read more »

ரணிலை பிரதமராக்குவதற்கு தயார்!- ஜனாதிபதி மைத்திரி

நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டுமென்றால் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்திய கடதாசிகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாதாயின், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஒருவரின் பெயரினை முன்மொழியுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த... Read more »

வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

“கஜா“ புயல் காரணமாக வடமாகாண பாடசாலைகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே-இன் அலுவலகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள கஜா புயல் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்வுகூறப்பட்ட நிலையில் வடக்கின்... Read more »