. புங்குடுதீவு மாணவி கொலை – Jaffna Journal

வித்தியா கொலையாளிகளை முதலில் தூக்கிலிடுங்கள்: பிரசன்ன

மரண தண்டனையை நிறைவேற்றுவதாயின் முதலில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுட்டவர்களுக்கே அதனை நிறைவேற்ற வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதனை விடுத்து பாதாள உலகக் குழுவை முதலில் குறிவைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென... Read more »

சுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி? விசாரணைகள் முடிவு!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாத வித்யா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக இனம் காணப்பட்ட சுவிஸ் குமார் தொடர்பிலான வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அந்தவகையில், விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் அறிவிக்கப்ட்டது. இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில்... Read more »

படுகொலை செய்யப்பட்ட வித்யாவின் சகோதரிக்கு தொழில்வாய்ப்பு!

யாழ். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்யா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது நியமனத்தை நேற்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடருந்து பெற்றுக்கொண்டார். கடந்த வருடம்... Read more »

வித்தியா படுகொலை வழக்கு விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு!

வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ் குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் விசாரணை கோவைகள், சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளது. குறித்த வழக்கானது இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில், நீதிவான் ஏ.எம்.எம்.றியால்... Read more »

வித்தியா படுகாலை வழக்கு மூல வழக்கேடுகள் நீதிமன்றில் கையளிப்பு

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவுக்கு அமைவாக, தீர்ப்பாயத்தால் நடத்தப்பட்ட மூல வழக்கேடுகள் மற்றும் அதன் பிரதிகள், உயர் நீதிமன்றில் நேற்று (13) கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா... Read more »

சுவிஸ்குமாரை பொலிஸ் காவலிலிருந்து விடுவித்த உதவிய குற்றச்சாட்டு வழக்கு முன்னாள் டிஜஜியின் சாட்சியத்தை ஏற்க நீதிமன்று அனுமதி

வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை பொலிஸ் தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கின் முதலாவது சந்தேகநபரான வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு கீழ் பணியாற்றிய யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.எல்.பெரேராவால் வழங்கப்படும்... Read more »

வித்தியா கொலை வழக்கு: மாவையிடம் வாக்குமூலம்

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(சனிக்கிழமை) வாக்குமூலம் பெற்றுள்ளனர். வித்தியா கொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பிக்க உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ்மா... Read more »

வித்தியாவின் குடும்பத்தவர்களை அவர்களுடைய வீட்டிற்கே சென்று சந்தித்த ஜனாதிபதி!

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் ஜனாதிபதியை சந்தித்தார். நடமாடும் சேவையில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தால் வவுனியாவில் வழங்கப்பட்ட வீட்டில் தற்போது வசித்து வரும் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். குடும்பத்தின் சுகதுக்கங்களை கேட்டறிவதற்காக அவரது... Read more »

வித்தியா கொலை வழக்கு : பொலிஸாருக்கு பணப்பரிசு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு 13 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண சபை நுண்கலை கேந்திர நிலையத்தில் நேற்று (20) சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்ணாயக்க... Read more »

வித்தியா கொலை தொடர்பில் விசாரணைகளை துரிதமாக மேற்கொண்ட பொலிசார் கௌரவிப்பு

புங்குடுதீவில் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கு சிறந்த முறையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசாருக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இதேபோன்ற கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கான மிகஉயர்வான முறையில் பங்களிப்பு செய்த பொலிஸ்... Read more »

வித்தியா படுகொலை: மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைய ஐந்து ஆண்டுகளாகும்!!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகளால் உயர் நீதிமன்றில் முன்வைக்கப்படும் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவுபெற குறைந்தது 5 ஆண்டுகள் எடுக்கும் என சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன தெரிவித்தார். 5 குற்றவாளிகள் சார்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை முனவைத்த... Read more »

வித்தியாவின் கொலை வழக்கு! : ஜனாதிபதியின் கருத்து

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனையானது வரலாற்று ரீதியில் மதிக்கப்பட வேண்டிய ஓர் தீர்ப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து... Read more »

‘கொலையாளிகளின் பணம் வேண்டாம்’ : வித்தியாவின் தாயார்

எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடமிருந்து ஒரு சதமும் வேண்டாம்” என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை சென்ற புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு... Read more »

வித்தியா வழக்கு: 14 நாட்களுக்குள் மேன் முறையீடு

புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யவுள்ளதாக, தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், யாழ் மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வௌியிட்ட... Read more »

பலத்த பாதுகாப்புடன் குற்றவாளிகள் போகம்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 7 பேரையும் கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் குறித்த 7 கைதிகளையும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்துச் சென்றுள்ளனர். தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி குறித்த 7... Read more »

வித்தியா வழக்கில் எழுவருக்கு மரண தண்டனை

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என, ட்ரயல் அட் பார் மன்று, சற்று முன்னர் தீர்ப்பளித்து, அவர்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தது. மரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத்... Read more »

சுவிஸ்குமாரை தப்பிக்க வைக்க விஜயகலா முயற்சி: நீதிபதி இளஞ்செழியன்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை விடயத்தில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்ட விதத்தை நீதிபதி இளஞ்செழியன் கடுமையாக விமர்சித்துள்ளார். இக் குற்றத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை காப்பாற்றுவதற்கு விஜயகலா முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், இச் செயற்பாடு சந்தேகநபரை தப்பிக்க வைக்கும்... Read more »

உயிருக்கு ஆபத்து! : வித்தியாவின் குடும்பத்தார்

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வழங்கப்படவுள்ள நிலையில், சந்தேகநபர்களில் ஒருவரைக்கூட விடுதலை செய்யக் கூடாதென வித்தியாவின் குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர். வழக்கு விசாரணைகளின் போதே பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இவர்களில் யாரேனும் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தமது... Read more »

வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கைது!

வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது, கஹாவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,... Read more »

வித்தியா கொலை வழக்கு: உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர்?

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்றும், வழக்குத் தொடுனர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் நம்பகத்தன்மை அற்றதெனவும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரையில் தெரிவித்துள்ளனர். மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு... Read more »