Ad Widget

தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா

தமிழர் தாயகம் இன்று பல வழிகளிலும் ஒடுக்கப்பட்டு, எமது கலாச்சாரம் திட்டமிட்ட வடிவில் சிதைக்கப்பட்டு, தமிழர் கலைகள் அருகி வரும் நிலையில், எமது இளைய சமுதாயம் பல்வேறு தகாத திசைகளில் கவரப்பட்டு தமிழரின் எதிர்காலமே மிகவும் ஒரு கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் இவ்வேளையில், எமக்கான கலைகளை வளர்த்து, கலாச்சாரத்தினை பாதுகாத்து, எமது இளைய சமுதாயத்தை சரியான திசையில்...

தமிழ் மக்கள் பேரவையுடன் சர்வதேச சட்ட வல்லுனர் பிரான்சிஸ் பொயில்!

தமிழ் மக்கள் பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான உபகுழுவின் சர்வதேச சட்ட ஆலோசகராக சர்வதேச சட்ட வல்லுனரும், பிரபல்ய போர்க்குற்றம் மற்றும் இனஅழிப்பு சட்ட வல்லுனருமாகிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் பிரான்சிஸ் பொயில் இணைந்துள்ளார். ஒரு உள்ளக விசாரணைகூட இம்மியளவும் நகராத நிலையில், அதுவும் உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் சேர்த்துகொள்ளப்படமாட்டார்கள் என செய்திகள் வரும்...
Ad Widget

தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய மூன்று உபகுழுக்கள் ஆரம்பம்!

நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தமிழ் மக்கள் பேரவை தனது முக்கிய மூன்று உபகுழுக்களை ஆரம்பித்துவைத்து அதன் செயற்பாடுகள் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது. இச்செய்தியாளர் மாநாட்டில், கலை கலாசாரத்திற்கான உபகுழு சார்பான விளக்கத்தினை அதன் இணைப்பாளர்களாகிய ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் (சின்மயா மிஷன்), அருட்தந்தை மரிய சேவியர் (திருமறைக்கலாமன்ற ஸ்தாபகர்) மற்றும் திரு. T...

புலம்பெயர் உறவுகளுக்கு தமிழ் மக்கள் பேரவையின் வேண்டுகோள்

தமிழ் மக்கள் பேரவை புலம் பெயர் தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது. அதன் முழுவடிவம் வருமாறு.. புலம்பெயர் உறவுகளுக்கு தாயகத்திலிருந்து ஒரு அன்பான வேண்டுகோள். முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் பின் தாயக அரசியல் ஒரு சரணாகதி அரசியலாக மாறி வந்த தருணத்தில், தமிழ் இனத்தின் இருண்ட எதிர்காலம் கண்களில் தெரியவே தாயகத்தில் தமிழ்...

தமிழின அழிப்பு நினைவுநாள், ஒற்றுமையாய் நினைவு கூறுவோம்

ஐ, நா. சபையின் மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன வெளியேற்றப்பட்ட பின்னணியில் நவீன உலக ஊடகத்துறை இருளில் வைக்கப்பட்டு, சர்வதேச நாடுகள் பார்த்திருக்க வன்னி மண்ணில் நடத்தப்பட்டஅந்தக் கொடூரம், பின்னர் காணொளிகளகக் கசிய, சனல் 4 போன்ற ஊடகங்களின் வெளியீடுகள் அவற்றை தெளிவாகப் போர்க்குற்றங்களாக நிரூபித்து ஆவணத் தொடர்கள் வெளியிட, ஐ....

பேரவையின் தீர்வுத் திட்டம் அமெரிக்காவிடம் கையளிப்பு!

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு நேற்றய தினம் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவராலய அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கெலி பிலிங்ஸ்சிலியிடம் (Kelly Billingsley) தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் இதனை நேரடியாகக் கையளித்தனர். இதனைத்தொடர்ந்து அமெரிக்கக் குழுவினருக்கும், தமிழ் மக்கள் பேரவை குழுவினருக்குமான சந்திப்பும் நடைபெற்றது.

வடக்கு மக்களின் பிரச்சினை குறித்து ஐ.நா.விடம் கோரிக்கை

வட மாகாணத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தருமாறு கோரி ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அம் மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் குறித்த கோரிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள்...

தமிழ்மக்கள் தீர்வுத்திட்ட வரைபு ஐநாவிடம் கையளிப்பு!

இலங்கைக்கான ஐநா வதிவிடப்பிரதிநிதி உனா மக்கோளி தலைமையிலான குழுவுக்கும் தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது. இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இருதரப்பினரும் பரஸ்பரம் வெளிப்படைத் தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு எவ்வாறு சர்வதேசம் தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பலப்படுத்தல் மற்றும் செயல்படுத்தல்களில்...

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு நோர்வே துாதுவரிடம் கையளிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு நேற்று செவ்வாய்கிழமை நோர்வே அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. பேரவையின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினரான சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் ஸ்ரீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஷொபியொன் கோஸ்டாட்செசரிடம் இதனை கையளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும் நோர்வே தூதுவர் அடங்கிய குழுவிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது....

தமிழ் மக்கள் பேரவைத் தீர்வுத் திட்டம் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிப்பு!

தமிழ் மக்கள் பேரவையின் இறுதித் தீர்வுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதித்திட்ட வரைபை தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் தலைமையில் அரசியல் உபகுழு இணைப்பாளர் புவிதரன் மற்றும் அரசியல் குழு உறுப்பினர்களான இரத்தினவேல், விஜயகுமார் மற்றும் காண்டீபன் ஆகிய ஐந்துபேரைக்...

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு இந்திய அரசிடம் கையளிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது நேற்று உத்தியோகபூர்வமாக இந்திய அரசிடம் கையளிக்கப்பட்டது. பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன் தலமையில் பேரவையின் செயற்பாட்டுக்குழு உறுப்பினர்கள், மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினர்கள் அடங்கிய ஐவர் கொண்ட குழு நேற்று (27.04.2016) மதியம் 2.30 மணியளவில் யாழ் நகரில் உள்ள இந்திய...

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் அரசகுழுவிடம் கையளிப்பு!

அரசியல் விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட தீர்வுத் திட்டவரைபு, அரசியல் யாப்பு மறுசீரமைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையின் இறுதித் திட்டவரைபு வெளியிடப்பட இருந்த நிலையில், அரசியல் யாப்பு மறுசீரமைப்புக் குழுவினரால் கடந்த திங்கட்கிழமையே இறுதித் திகதி (25) வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த திங்கட்கிழமையன்று தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகளால் பேரவையின்...

பேரவையின் செயற்குழுவிலிருந்து விலகினார் முதலமைச்சர்!

தமிழ் மக்கள் பேரவையின் குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தின் நிறைவில் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையினரால் தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பு இறுதி செய்யும் முகமாக நேற்று முன்தினம் யாழ். பொது நூலகத்தில் கூடியது இதில் கலந்து கொண்ட முதலமைச்சரே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்கள்...

தமிழ் மக்கள் பேரவையின் வரைவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வின் முன்மொழிவு வரைவு தீர்வு திட்டம் இன்று ஏகமனதாக வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய வைத்திய கலாநிதி ப.லக்ஸ்மன் தெரிவித்தார். இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் அச்சு பிரதிகளையும் மிக விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழு இன்று கூடுகிறது

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு சம்பந்தமான மக்கள் கருத்தறியும் செயற்திட்டம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து நிபுணர் குழுவானது இன்று முதல் மீண்டும் ஒன்று கூடித் தீர்வுத்திட்ட இறுதி வரைபை தயாரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளது. இப் பணியானது எதிர்வரும் நாட்களில் முடிவுறும். பேரவையின் தீர்வுத்திட்ட வரைபுக்கு தமிழ் மக்கள் பெருமளவில் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருக்கும்...

தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் கருத்தறியும் செயற்திட்டம் நிறைவு

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு தொடர்பான மக்கள் கருத்தறியும் செயற்திட்டம் நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக பேரவை அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த நிபுணர்குழு இன்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடர்ச்சியாக ஒன்று கூடி தீர்வுத்திட்ட இறுதி வரைபை எதிர்வரும் சில நாட்களில் தயாரித்து முடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தீர்வு திட்ட இறுதி வரைபானது சர்வதேசத்திடமும்,...

தீர்வுத் திட்ட முன்வரைபு ‍தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் அமர்வு கொழும்பில்

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பிலுள்ள தமிழ் மக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ்...

புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு பூர்த்தியடையும்

தமிழ் மக்கள் பேரவை தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தீர்வுத்திட்ட வரைபை முழுமையாக்குமெனவும், அதன் பின்னர் அரசாங்கத்திற்கு கையளிக்கும் எனவும் பேரவையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த விடயம்...

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைபு புலம்பெயர் உறவுகளுக்கு பகிரங்க அழைப்பு

தமிழ்மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்டமுன் வரைபு தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்கள் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங் களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டுவருவதும் இதில் மக்கள் மிகவும் உற்சாகத்துடன்...

போரின் பாதிப்புக்கள் தொடர்பில் தகவல் திரட்ட தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் மற்றும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் பற்றிய விபரங்களை திரட்டுவதற்காக செயலணி குழுக்களை நியமிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகால போரில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான சரியான விபரங்கள் எதுவும் மதிப்பிடப்படவில்லை என்றும் அரசாங்கம் மேற்கொண்ட புள்ளிவிபரங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts