
குவைட்டில் சட்டவிரோத மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்களும் ஒரு இந்தியரும் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் கெய்பான் பிரதேசத்தில் வாடகைக்கு பெற்றுக் கொண்ட வீடொன்றில் இவ்வாறு சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,... Read more »

2016ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி முதல் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பட்டியல் வெளியாகி வருகிறது. இதன்படி, முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி யோஷினோரி... Read more »

சுரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ என்று பெயர் சூட்டப்பட்ட புயல் பகாமஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் அமரிக்கா, ஹெய்தி, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹெய்தியும் பெருமளவில்... Read more »

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகமாக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெர்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.நா.வின் தற்போதை செயலாளர் நாயகமான பான் கீ மூனின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இப் புதிய தெரிவு இடம்பெற்றுள்ளது.... Read more »

அமெரிக்காவின் விக்கிலீக்ஸ் அசாஞ்சே தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ பற்றிய ரகசிய தகவல்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் அசாஞ்சே தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.... Read more »

நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு ஜப்பானைச் சேர்ந்த உயிரணுவியல் விஞ்ஞானி யோஷினோரி ஓசுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத் தாமே அழித்து சுத்தம் செய்துகொள்ளும், “ஆட்டோஃபஜி’ என்றழைக்கப்படும் “சுய துப்பரவு’ செயல்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு... Read more »

கவர்ச்சியால் மேற்குலக நாடுகளில் அதீத பிரபல்யம் அடைந்துள்ள அமெரிக்காவின் கவர்ச்சி கன்னியான கிம் காடஸ்சியன் வெஸ்ட்டிடம் இருந்து மில்லியன் கணக்கான நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. பாரிஸ்சிலுள்ள சொகுசு வீட்டில் வைத்து பொலிஸ் சீருடை அணிந்த இருவர் அவரிடம் இருந்த 6 மில்லியன் யூரோ பெறுமதியான நகை... Read more »

எதிர்கால தலைமுறைகளை பாதுகாப்பதற்காக போதை மருந்துக்கு அடிமையான 3 மில்லியன் பேரை கொன்றுவிட தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ தெரிவித்திருக்கிறார். ஈவிரக்கமில்லாத பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்தக் கருத்துக்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இவர் பதவியேற்ற பின்னர் காவல்துறையினராலும், கண்காணிப்பாளர்களாலும்... Read more »

எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் இடம்பெற இருந்த 19வது சார்க் மாநாட்டை பிற்போடுவதாக பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அந்த மாநாடு இடம்பெறும் புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை... Read more »

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த இரவு விருந்து நிகழ்வு கடந்த சனிக்கிழமை (24.09.2016) குட்வூட் சமுக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதிப்புக்குரிய பல்லின கலாச்சார அமைச்சர், சோய் பெட்டிசன்,... Read more »

காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் வீரர்கள் அதிகாலை நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் புகுந்து கோழைத்தனமான தாக்குதல்கள் நடத்தினர். இதில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய சதிகாரர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். உரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்... Read more »

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. Read more »

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கு அதிகம் இருப்பதாக இணையத் தேடுதளமான யாகூ சிங்கப்பூர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் துணைப் பிரதமரான தர்மன் சண்முகரத்னம் அடுத்த பிரதமராக தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதை கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில்... Read more »

குவைத் நாட்டில் சாரதியாக பணியாற்றுகின்ற இலங்கை பிரஜை ஒருவர், அந்நாட்டு பெண் ஒருவருக்கு கை குலுக்குவது போல் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பக்கத்து வீட்டுக்காரரான குறித்த இலங்கை பிரஜை, கை குலுக்குவது போல் தன்னிடம் தகாத... Read more »

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Eleanor Sharpston பரிந்துரை செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கான உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், அவ்வமைப்பினை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஆலோசகரின் இந்த... Read more »

புதன்கிழமை அன்று, எகிப்து கடற்பகுதிக்கு அப்பால் ஒரு படகு மூழ்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது. படகில் சுமார் 550 பேர் இருந்ததாகவும், இத்தாலிக்கு செல்ல ரோஸெட்டா துறைமுகத்திலிருந்து வெளியேற காத்திருந்த போது மேலும் பலர் படகிற்குள் திணிக்கப்பட்டதாகவும் தப்பிப்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதில்... Read more »

இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகுக்கு ஒரு முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்குத் தேவையான முழுமையான உதவிகளை வழங்க, தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 71ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக ஐக்கிய... Read more »

ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற வெடிப்பில், குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்சியா மாவட்டத்தின் மன்ஹற்றன் பகுதியிலேயே, இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கே பாரிய சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நியூஜெர்சியில் குழாய் குண்டு வெடித்து சில... Read more »

பங்களாதேஷ் பிரஜைகளுக்கான ஒன் எரைவல் வீசா முறையை இலங்கை அரசாங்கம், அந்த நாட்டுக்கு அறிவிக்காமலேயே நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பங்களாதேஷூம் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கி வந்த ஒன் எரைவல் வீசா முறையை நிறுத்தியுள்ளதாக, வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. மேலும், இலங்கை... Read more »

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் தொடர்ந்தும் இலங்கை, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இயங்கி வருவதால், புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான கொள்கையில் எந்த வித மென்மையான போக்கையும் கடைப்பிடிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டொட்டன் (Peter Dutton) பாராளுமன்றத்தில்... Read more »