இங்கிலாந்து தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் பிரபாகரன் படம்!!

இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இதுகுறித்த படமும் செய்தியும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பாக்கிளேஸ் பேங்கில், நீங்கள் விரும்பும் புகைப்படத்தைக் கொடுத்து உங்கள் ஏ.டி.எம் கார்டில்... Read more »

கனேடிய இலங்கையரிடம் அதிக வருமான ஆசை காட்டி பணத்தை சுருட்டிய சிங்களப் பெண் கைது

அதிக வருமானத்தைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி கனடாவில் பலரின் பணத்தை ஏப்பம் விட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 52 வயதுடைய சிங்களப் பெண் ஒருவருக்கு கனேடிய நீதிமன்றம், ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. அதேவேளை மூன்று மில்லியன் கனேடிய டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முஸ்கொகா... Read more »

கல்விக்கு நோய் ஒரு தடையில்லை!: நிரூபித்த இலங்கையர்

கல்வியில் சாதிக்க நோய் ஒரு தடையில்லை என நிரூபித்த இலங்கையர் குறித்து, அவுஸ்திரேலிய ஊடகங்களில் செய்திகள் வௌியாகியுள்ளன. தினேஷ் பலிபனய எனும் குறித்த இளைஞர், 2010ம் ஆண்டு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் வைத்தியப் படிப்பை மேற்கொண்டு வந்தபோது, திடீர் விபத்தொன்றுக்கு முகம்கொடுத்தார். பிலிஸ்பேனில் வசிக்கும்... Read more »

ஆர்டிக் கடலுக்கடியில் கேட்கும் மர்ம ஓசைக்கு என்ன காரணம்? கனடா ஆய்வு

ஆர்டிக் கடலின் அடிப்பகுதியில் இருந்து வெளிப்படும் மர்மமான ஒலி ஒன்றை நாட்டின் ராணுவம் ஆய்வு செய்து வருவதாக கனடா அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கனடாவின் தொலைதூர வட பகுதி எல்லையில் ஃபியுரி மற்றும் ஹெக்லா நீரிணை முழுவதும் பல மாதங்களாக இந்த ஓசை கேட்டு கொண்டிருக்கிறது.... Read more »

மத்திய தரைக் கடலில் மற்றொரு பேரனர்த்தம்!! நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகள் பலி

லிபியாவுக்கு அப்பாலுள்ள கடலில் இரண்டு படகுகள் மூழ்கியதால் நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகள் பலியாகியிருப்பதாக ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறைந்த பட்சம் 239 பேர் மரணித்துள்ளதாக தெரிகிறதென ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் கார்லோட்டா சமி குறிப்பிட்டார். விபத்தில் உயிர் தப்பிய இரண்டு பேர் இத்தாலியின்... Read more »

மீண்டும் ஒரு சவுதி அரசருக்கு கடுமையான தண்டனை

சவுதி அரேபியாவில் தற்போது ஆளும் அரச குடும்பத்தின் இளவரசருக்கு, சிறையில் கடுமையான சாட்டையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு, கொலை குற்றத்தில் கைது செயப்பட்ட சவுதி அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உலகம்... Read more »

வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வேகமான செயற்பாடுகள் அவசியம்

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அவசியமான செயற்பாடுகள், துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழுவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.... Read more »

கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு வாழ்நாள் தடை!

அகதிகளின் வருகையைத் தடுக்கும் முகமாக அவுஸ்திரேலியாவுக்குள் கடல்வழி மூலமாக நுழையும் மக்களுக்கு, அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு வாழ்நாள் தடை விதிக்கும் சட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த அறிவிப்பினை அவுஸ்திரேலியப் பிரதமர் மார்க்கம் டர்ன்புல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இச்சட்டத்தின்படி கடல் வழியாக... Read more »

செல்பியால் தாழ்வு மனப்பான்மை, வாழ்க்கையில் திருப்தியின்மை நிலை ஏற்படுகிறது

பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்த அவரவர் செல்பி புகைப்படங்களையோ அல்லது மற்றவர்களது செல்பி புகைப்படங்களையோ மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவர்களுக்குள்ளே தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, வாழ்க்கையில் ஒருவகையான திருப்தியின்மை நிலை ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. விதவிதமாக செல்பி எடுத்து,... Read more »

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் நீங்கியது

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா முக்கோணத்திற்கு அருகே செல்லும் விமானங்கள், கப்பல்கள் எவ்வாறு காணாமல் போகின்றன என்ற மர்மத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 5,00,000 சதுரடி பரப்பளவில் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ளது.இது Florida, Puerto Rico மற்றும் Bermuda ஆகிய பகுதிகளுக்கு... Read more »

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டில் உள்ள டோட்டோரி என்ற இடத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.6 ஆக பதிவானது. இதனால், வீடுகள் குலுங்கின.நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும்... Read more »

இலங்கைப் பெண் ஒருவர் குவைத்தில் கைது!

சட்டவிரோதமாக குவைத் நாட்டில் மதுபான தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் இலங்கைப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பைஹா என்ற பகுதியில் வைத்து குறித்த பெண் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இதன்போது 400 மதுபான போத்தல்கள், 10 பெரல்கள் உள்ளிட்ட மதுபான தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும்... Read more »

சவூதி இளவரசருக்கு மரணத் தண்டனை!!

சவூதி பிரஜை ஒருவரை கொன்ற குற்றத்திற்காக சவூதி நாட்டு இளவரசர் துர்கி பின் சவுத் அல் கபீருக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. மேற்படி இளவரசர், மூன்று வருடங்களுக்கு முன் தனது... Read more »

யாழ்.- கிங்ஸ்டன் இரட்டை நகர உடன்பாடு லண்டனில் கைச்சாத்து!

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) மாநகரத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இரட்டை நகர உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொருளாதார வளர்ச்சி, வன்முறை ஒழிப்பு, அனைவருக்கும் பொதுவான... Read more »

ஆடம்பர திருமணத்தால் மாட்டிய இலங்கைத்தமிழர்

பிரித்தானிய நாட்டில் நவீன முறையில் கொள்ளையிட்டு ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இலங்கையை சேர்ந்த கிசோக் தவராஜா(25) என்பவர் பிரித்தானிய தலைநகரான லண்டனில் உள்ள Tesco என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். டெஸ்கோ நிறுவனத்தில் தவராஜா... Read more »

புதிய செயலாளர் நாயகமாக குட்டரெஸ்ஸை நியமித்தது ஐ.நா

ஐக்கிய நாடுகளின், புதிய செயலாளர் நாயகமாக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்டோனியோ குட்டரெஸ்ஸை, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, நேற்று வியாழக்கிழமை (13) நியமித்துள்ளது. Read more »

பொதுநலவாயத்திலிருந்து விலகியது மாலைதீவுகள்

பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகுவதாக, மாலைதீவுகள் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அந்நாட்டின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பொதுநலவாயத்திலிருந்து விலகும் முடிவு, மிகவும் கடினமானது என்ற போதிலும், தவிர்க்கப்பட முடியாதது எனவும் தெரிவித்தது. பொதுநலவாயத்திலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ள போதிலும், சர்வதேச ரீதியில்,... Read more »

தாய்லாந்து மன்னர் பூமிபோல் அத்துல்யாதேவ் காலமானார்

உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அத்துல்யாதேவ் காலமானார். இறக்கும் போது அவருக்கு 88 வயது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மன்னர் நேற்று மரணமானதாக தாய்லாந்து அரண்மனை அறிவித்துள்ளது. 70 வருட காலம்... Read more »

இலங்கை பணிப் பெண்கள் இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை

துபாயை ஆளும் குடும்ப உறுப்பினரின் அரண்மணையில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை பணிப் பெண்கள் இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என, அந்த நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. அரண்மனையில் இருந்து கடந்த மார்ச் மாதம் நகைகள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் என்பவற்றை... Read more »

புலிகளுடன் தொடர்புடையவர்களை பாதுகாக்கவேண்டிய தேவையில்லை! சுவிஸ் அரசு அறிவிப்பு

சிறீலங்காவில் மனித உரிமைகள் நிலமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என அடைக்கலம் கோரியவர்களை பாதுகாக்கவேண்டிய தேவையில்லையென சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. சுவிஸ் குடிவரவுப் பணியகத்தை மேற்கோள்காட்டி, சுவிஸ் இன்போ இணையத்தளம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ‘சிறீலங்காவில் மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம்... Read more »