கொலம்பிய விமான விபத்து: 75 பேர் பலி, 6 பேர் உயிர் தப்பினர்

சப்பகோயென்ஸ் கால்பந்து குழுவினரை ஏற்றி சென்ற ஒரு விமானம், கொலம்பியாவில் விழுந்து நொறுங்கியுள்ளது. அதிலிருந்து 75 பேர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் 6 பேர் உயிர் தப்பியுள்ளனர். கொலம்பியாவின் மெடலின் நகரை அந்த விமானம் அணுகிக் கொண்டிருந்த வேளையில் மலைப்பாங்கான பகுதியில் இந்த... Read more »

பிரேசில் கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் விபத்து

பொலிவியாவில் இருந்து கொலம்பியாவிற்கு பயணித்த விமானம் மேடெல்ளின் பகுதியை அண்மித்த வேளை ஏற்பட்ட விபத்தின் காரணமாக சிலர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. பிரேசில் கால்பந்து வீரர்கள் அடங்களாக 72 பயணிகள் மற்றும் 9 விமானப் பணியாளர்கள் அடங்கலாக 81 பேருடன் குறித்த விமானம்... Read more »

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் கைது

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு நோர்வே காவல்துறையினர் 70 இலங்கையர்களை கைது செய்துள்ளனர். நோர்வேயில் துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களே இவ்வாறு கைது... Read more »

பிடல் கெஸ்ட்ரோ காலமானார்!

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோ உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிடல் கெஸ்ட்ரோ மரணத்தை அதிபரும் அவரது சகோதரருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.  கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர் பிடல் கெஸ்ட்ரோ. இவர் வயோதிபத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல்... Read more »

ஆறுவயது சிறுவனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த ஒபாமா

சிரியாவில் குண்டுவெடிப்பால் தரைமட்டமான கட்டிடத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, பீதியில் உறைந்துப்போய் இருந்த சிறுவனுக்கு அடைக்கலம் அளிக்க முன்வந்த ஆறுவயது சிறுவனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த ஒபாமா, அவனை பாராட்டி, வாழ்த்தினார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில்... Read more »

பிரான்சில் ஈழத் தமிழர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஈழத் தமிழரான ஜெயக்குமார் என்பவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் லாச்சப்பல் பகுதியில் மாவீரர்நாள் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்தவேளையிலே இனந்தெரியாத நபர்கள் குறித்த இளைஞன்மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். வாள் வெட்டில்... Read more »

ஜப்பானில் பாரிய நில நடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுமார் 1 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி பேரலைகள் புகுஷிமா அணு உலை பகுதியை ஆக்ரோஷத்துடன் தாக்கியுள்ளன. ஜப்பானின் புகுஷிமா அணு உலை பகுதியை மையமாகக் கொண்டு... Read more »

அவுஸ்திரேலியாவில் நிலத்தடி நீர் முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிநெறி

ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத்தின் ஊடாக நிலைத்து நிற்கும் நிலத்தடி நீர் முகாமைத்துவம் என்ற ஒரு மாத காலப் பயிற்சிநெறி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையைச் சேர்ந்த நீர் முகாமைத்துவத்துடன் தொடர்பானவர்களுக்கென மாத்திரமே விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயிற்சிநெறியில் இலங்கையில் இருந்து 15 பேர்... Read more »

அகதி அந்தஸ்து பெற்று ஆஸ்திரேலியாவில் குடியேறிய இளைஞர் திடீர் மரணம்!

இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் நோக்கில் ‘மெராக்’ கப்பலில் வந்த, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24) என்ற இளைஞர் திடீர் மரணமடைந்துள்ளார். சிட்னியில் வசித்துவந்த அஜிதனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதாலேயே மரணமடைந்துள்ளதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார். அஜிதனுக்கு திடீர் வலிப்பு... Read more »

“இலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை”

சுவிஸ் அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அந்நாட்டின் சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின்... Read more »

உயிரோடு இருப்பவர்களை இறந்ததாக அறிவித்த ஃபேஸ்புக்

சமூக ஊடக வலைதளமானஃபேஸ்புக்கில் இருக்கும் அசாதராண செயலி பிழையால், பல பேர் இறந்து விட்டதாக முத்திரை அறிவிப்பு வெளியானது. ஃபேஸ்புக்கின் தலைமை செயலதிகாரியான மார்க் ஸூகர்பெர்க் உள்பட ஃபேஸ்புக்கின் பல பயனாளர்களின் சுயவிவர பக்கங்களில் இந்த செய்தி தவறுதலாக தோன்றியிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட சில... Read more »

அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியமர்த்தத் திட்டம்!

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிச்சென்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டு, நவ்று மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் விடுக்கப்படவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிவந்த நிலையில் நவ்று மற்றும் மனுஸ் தீவில்... Read more »

சாரண இயக்கத்தினருக்கு மன நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு

சாரண சாரணிய இயக்கத்தினருக்கு வாழ்க்கையின் பிந்தைய கட்டத்தில் மன நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவு என பிரிட்டனின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 1958 ல் பிரிட்டனில் பிறந்த சுமார் பத்தாயிரம் மக்களிடம் அவர்கள் வாழ்நாள் முழுதும் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளது.... Read more »

இலங்கை தமிழரின் படத்தில் நடித்தவர் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒரு சினிமாவில் நடித்திருக்கிறார். அதுவும் இலங்கையின் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான சந்தரன் ரத்னம் தயாரித்த ஒரு படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தின் பெயர் ‘Ghosts Can’t Do It’. இது குறித்து... Read more »

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் 3 தமிழர்கள் வெற்றி

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுடன் பாராளுமன்ற செனட் சபையின் 34 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.... Read more »

உலக நாடுகளுடன் மோதமாட்டோம்: டொனால்ட் டிரம்ப்

உலக நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கப் போவதில்லையென்றும் அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாவே செயற்படுவேன் என்றும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். உலகின் மிகவும் பலம் பொருந்திய பதவியாக கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதி பதவியை தனதாக்கிக்கொண்ட குடியரசுக் கட்சியின் டொனால்ட் டரம்ப், தனது... Read more »

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவு

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாவதற்குத் தெரிவாவதற்கு 270 பிரதிநிதிகள் தேவை என்ற நிலையில், 276 பிரதிநிதிகளை தற்போது பெற்றுள்ள நிலையிலேயே, ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி... Read more »

வருகிறது சுப்பர் மூன்

‘சுப்பர் மூன்’ நிலவு, பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வு, எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. 70 ஆண்டுகளுக்கு பிறகு, மிகவும் பிரகாசமான சுப்பர் மூனாக, இது அமையுமென, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறானதொரு அறிய நிகழ்வு இதற்கு முன்னர் 1948ஆம் ஆண்டே... Read more »

அமெரிக்க தேர்தல்: துப்பாக்கி சூட்டில் 4 பேர் படுகாயம்

கலிபோர்னியா மாகாணத்தின் அசுசா நகரில் வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கி சூடு இடபெற்றுள்ளது. மர்ம நபரின் துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை நேரத்தின் பிரகாரம் இன்று புதன்கிழமை காலை 5 மணியளவிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம்... Read more »

அமெரிக்க தேர்தல்: ஹிலரிக்கு 68 வெற்றி ட்ரம்புக்கு 48 வெற்றி…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது முடிவுகள் தொடர்ந்தும் வௌியாகிய வண்ணம் உள்ளன. கடும் போட்டி நிலவும் பல மாநிலங்களில் வெற்றி பெறப் போவது யார் என்ற கேள்வியுடன் உலகளாவிய ரீதியில் முடிவுகள் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இதன் அடிப்படையில் குடியரசு... Read more »