அவுஸ்திரேலிய அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் வேலைகள் ஆரம்பம்!

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் அங்க அடையாளங்கள் மற்றும் கைரேகை அடையாளங்களைப் பதியத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றும் ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்தது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள... Read more »

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் பில்கேட்ஸ்: 2 தமிழர்களும் இடம் பிடித்தார்கள்

இந்த வருடத்திற்கான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில் கேட்ஸ். இந்த வருடம், உலகளவில் பெரும் பணக்காரர்கள் 13 சதவீத அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ள நிலையிலும் பில் கேட்ஸ் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஃபோர்ப்ஸ்... Read more »

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாத தாக்குதல்! ஐவர் பலி!

பிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்ககூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. லண்டணில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்திலே நேற்றைய தினம் இந்த தாக்குதல் நடத்ப்பட்டுள்ளது. இந்த... Read more »

மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் நோர்வே முதலிடம்!

ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மகிழ்ச்சி தினம் நேற்று (20) அனுஸ்டிக்கப்படுகின்றது. இதன்படி, மகிழ்ச்சியான நாடுகள் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அதன் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இலங்கை இந்த வருடம் 120ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், இந்தியா 122 ஆவது... Read more »

இலங்கை அணியினர் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதி பலி

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் குவரி யாசீன், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் பக்டிக்கா மாகாணத்தில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாசின், 2009ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் வைத்து இலங்கை... Read more »

இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்க கப்பம் கோரும் கடற்கொள்ளையர்கள்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், இலங்கைக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிவந்த வர்த்தகக் கப்பலை விடுவிக்க கப்பம் கோரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலை தேடும் பணிகளில் ஈடுபட்டுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட படகில் எட்டு பேர்... Read more »

புலிகளுக்கு நிதி சேகரித்தமை பயங்கரவாதச் செயற்பாடு! : ஐரோப்பிய நீதிமன்றம்!

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், தமது நடவடிக்கையை தீவிரவாதச் செயற்பாடு என்று வகைப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மோதலின்போது ஆயுதப்படைகளின் செயற்பாடுகள் தீவிரவாதம் எனக் கருதமுடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. நெதர்லாந்து... Read more »

ஆஸியில் இலங்கையர் படுகொலை: 3 நேபாளிகள் கைது

தெற்கு அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவரை படுகொலை செய்ததாக நேபாள பிரஜைகள் மூவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 44, 48 மற்றும் 34 வயதானவர்கள் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட அடிலெய்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப்... Read more »

கடும் பஞ்சம் 48 மணிநேரத்தில் 110 பேர் பலி, அவரச உதவி கோருகிறது சோமாலியா!

சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவிவரும் நிலையில் கடந்த 48 மணிநேரத்துக்குள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மாதிரம் 110 பேர் மரணமாகியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஹசன் அலி ஹைரே தெரிவித்துள்ளார். தென் மேற்கு பே பகுதியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் நெருக்கடியான காலக்கட்டத்தில்... Read more »

இந்தோனேசியாவில் ஈழ தமிழர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து வழங்குமாறு கோரி ஈழ தமிழர்கள் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஈழ அகதிகளின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாக சர்வதேச அகதிகள் நிறுவன அதிகாரிகள் வழங்கிய உத்தரவாதத்தினை தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.... Read more »

சிறைச்சாலையில் திருநங்கைகள் இருவர் அடித்துக் கொலை!

பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் இருவர், சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் கண்முன்னே சாக்கில் கட்டிவைத்து தடிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் ஆடைகளை ஆண்கள் அணிந்துகொள்வது சவுதி அரேபியாவில் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர்,... Read more »

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு ; ஒருவர் வைத்தியசாலையில்

இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எந்தவொரு அதிகாரிகளும் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடாத நிலையில் ஈழதமிழர்கள்... Read more »

உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் நெருங்கியத் தொடர்பு : எச்சரிக்கும் ஆராய்ச்சியாளார்கள்

உடல் பருமன் மற்றும் புற்றுநோய்க்கு இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை பிரிட்டன் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உடல் பருமனாக இருப்பதால் வயிறு, குடல், கல்லீரல், மார்பகம் மற்றும் கர்பப்பை உள்பட பல உறுப்புகளில் பதினோரு வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து காணப்படுவதாக இந்த... Read more »

குழந்தைகள் மீதான வன்கொடுமை : வத்திகானின் செயல்பாடு வெட்கக்கேடானது

வத்திகானில் குழந்தைகள் மீதான வன்கொடுமையை கண்காணிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். ஆணையத்தின் உறுப்பினரும், முன்பு, மதகுரு ஒருவரின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருமான மேரி காலின்ஸ் என்பவர், வத்திகானின் அதிகாரத்துவம் ஆணையத்தின் பணிகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். வத்திகானின்... Read more »

இலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை உரிய வகையில் செயற்படவில்லை: பிரித்தானியா

பொறுப்புக்கூறல், மனித உரிமை, பாதுகாப்பு மற்றும் மீள்கட்டமைப்பு விடயங்களில் இலங்கை உரியவகையில் செயற்படவில்லை என பிரித்தானியா குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) சிறப்பு விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தமிழர்களுக்கான... Read more »

உலகின் 8 ஆவது புதிய கண்டம் கண்டுபிடிப்பு

நியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின் 8 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு சமுத்திரத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் புதிய நிலப்... Read more »

வட கொரியா அதிபரின் சகோதரர் படுகொலை! பெண் கைது!

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னின் சகோதரர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வியட்நாம் நாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்கு உள்ளாகி வரும் வட... Read more »

வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரன் மலேசியாவில் கொலை

மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து படுகொலையாக இருக்கலாம் என தோன்றுகின்ற தாக்குதல் ஒன்றில், வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்னின், பிரிந்து வாழும் ஒன்றுவிட்ட சகோதரன் கொல்லப்பட்டுள்ளார். மக்கௌவுக்கு செல்ல விமானத்தை பிடிப்பதற்கு செல்லும் வழியில் திங்கள்கிழமை கிம் ஜோங் நாம் மீது... Read more »

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை!

பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று, தலைநகர் இஸ்லாமாபாத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது. காதலர் தினம் முஸ்லிம் கலாசாரத்தில் இல்லை என்ற அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உடனடியாக, காதலர் தினம் தொடர்பான அனைத்து விழாக்களையும், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்... Read more »

குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரோடு எரித்து கொலை!

ஈராக் நாட்டில் ஐ.எஸ். இயக்கத்தினர் குழந்தைகள் உள்பட மொத்தம் 15 பேரை பிடித்து உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டுப் படைகளுடன் இணைந்து... Read more »